Search This Blog

Friday, December 2, 2011

பென்ட்ரைவ் ட்ரிக்ஸ்: ஃபோல்டர் ஷார்ட்கட் பாதிப்பிற்கான தீர்வு


பென்ட்ரைவ் ட்ரிக்ஸ்: 

பென் ட்ரைவ் மற்றும் எக்ஸ்டெர்னல் ஹார்டிஸ்க் 
ஆகியவற்றை நாம் தினசரி அலுவல்
 நிமித்தமாகவும், தனிப்பட்ட பயன்பாட்டிற்காகவும் 
பல கணினிகள் மற்றும் மடிக்கணினிகளில்
 பயன் படுத்தி வருகிறோம். இவ்வாறான
 பயன்பாட்டில் நம்மை அறியாமலேயே சில 
சமயங்களில் வைரஸ் அல்லது
 மால்வேர் தாக்குதலுக்கு உள்ளான
 கணினிகளில் பயன்படுத்தும் நிலை
 உண்டாகி விடுவது இயல்புதான். 



பெரும்பாலும் நமது அதி முக்கியமான கோப்புகள்
 (புகைப்படங்கள், பல நாட்கள் செலவழித்து
 உருவாக்கிய ஆவணங்கள்)  அனைத்தையும்
 பென் ட்ரைவ்களில்தான் வைத்திருப்போம்.
 மால்வேர் தாக்குதல்களுக்கு உள்ளான
 கணினிகளில் இவற்றை பயன் படுத்திய 
பிறகு, நமது பென் ட்ரைவை சோதித்துப்
 பார்த்தால், நாம் அதில் வைத்திருந்த ஃபோல்டர்கள்
 அனைத்தும் காணாமல்  போய்,
 வெறும் 1 KB மட்டுமே அளவுள்ள 
 அவற்றின் ஷார்ட்கட்கள் மட்டுமே
 இருப்பதைக் கண்டு பலரும் அதிர்ச்சி அடைந்திருக்கலாம். 






ஒரு சிலர், பென் ட்ரைவில் உள்ள அனைத்தும்
 போய்விட்டது என்று எண்ணி ஃபார்மெட்
 கூட செய்திருக்கிறார்கள். பல
 நாள் உழைப்பு வீணாகிவிட்டதே
 என்றெண்ணி தலையில் கைவைத்து
 அமருவதை விட, கொஞ்சம் சிந்தித்தால்
 போதும் இழந்ததாக கருதிய கோப்புறைகளை
 மீட்டெடுத்து விடலாம். 
 
முதலில் நாம் செய்ய வேண்டியது,
 நமது பென் ட்ரைவ் அல்லது எக்ஸ்டர்னல்
  ட்ரைவ் லெட்டரை அறிந்து கொண்டு
 (உதாரணமாக G: ), ஸ்டார்ட் மெனுவில்
 ரன் கட்டளைக்கு சென்று CMD என
 டைப் செய்து DOS prompt இற்கு செல்லுங்கள்.
 அங்கு ட்ரைவ் லெட்டரை டைப் செய்து
 (G:) என்டர் கீயை அழுத்தி,  அந்த 
குறிப்பிட்ட ட்ரைவிற்கு செல்லுங்கள்.
 அங்கு DIR/AD என டைப் செய்து 
என்டர் கீயை அழுத்த, நமது ட்ரைவில்
 உள்ள அனைத்து ஃபோல்டர்களும்
 (நாம் இழந்ததாக கருதிய) hidden
 வடிவில் மறைக்கப்பட்டிருப்பதை காணலாம். 

இவற்றை எப்படி மீட்டெடுக்கலாம்? 

இதே DOS prompt -ல் இருந்து கொண்டு,
 Attrib -r -s -h /s /d G:*.* என்ற கட்டளையை
 கொடுங்கள். அவ்வளவுதான் உங்கள்
 கோப்புறைகள் மீட்கப்பட்டன.  பிறகு
 தேவையற்ற ஷார்ட்கட்கள், மற்றும்
 வைரஸ் என சந்தேகிக்கப்படும் 
கோப்புகள் அனைத்தையும் டெலிட் 
செய்து விடுங்கள். 





டாஸ் கட்டளைகளை பயன்படுத்த
 தயங்குபவர்கள் கீழே உள்ள 
சுட்டியிலிருந்து பேட்ச் பைலை 
தரவிறக்கி பயன்படுத்திக் கொள்ளலாம். 

Monday, November 14, 2011

How to make Internet voice calls for your Moblie free of cost


I am Using this application for My Satio Mobile thats ok because of your 2G network always you are in online process (gtalk,msn,yahoo) & call free


download path : http://www.fring.com/
Mobile Users    : m.fring.com

Procedure 

Fring SIP Settings for voip configurationFring

Now you can enjoy crystal-clear phone calls over the Internet using any Nokia phone with symbian support.
If you have access to a WiFi or 3G connection, you can save money by using the Internet to connect your call instead of using your mobile phone minutes. No roaming or out-of-network fees. Make your calls from anywhere in the world to anywhere for just a few pennies a minute. Simple to configure, inexpensive to use.
Fring is a free mobile VoIP software, allows you to talk & IM via your handset's internet connection to other mobile phones and PC-based services with SIP providers such as VoIPVoIP, as well as Skype, MSN Messenger, ICQ, Google Talk at no extra cost.
NOTE: This configuration guide assumes that you have already signed up and downloaded the application fromwww.fring.com You can find the installation guide of Fring here.
Here you can find Fring SIP settings and voip setup configuration guide with VoIPVoIP service.

STEP 1

To add VoIPVoIP service navigate between the options using the up and down arrows on your handset. Choose SIP from the list (press your joystick in to select items in the list) and press Next using your right soft key.
Fring other SIP settings 1

STEP 2

When the following screen appears choose "Other" from the list.
Fring other SIPconfiguration

STEP 3

The following screen appears;
Fring other SIP setup

Enter the following for Registrar Server settings
User ID: 5551231234 (Instead of 5551231234 account number example, use the account number assigned to you when signed up for VoIPVoIP service. )
Password: Enter the same password used to login to your VoIPVoIP account
SIP proxy : sip3.voipvoip.com

STEP 4

Once Fring is registered to make a SIP call:
Fring other SIP configuration

1. Choose a contact in your address book and press Options using your left soft key.
2. From the Call submenu, choose SIP call. Your call is made using the VoIPVoIP account you have added.
Make Calls!

To dial any phone number that is part of the NANP (North American Numbering Plan), you must dial:
1 + Area Code + Phone number
To dial any phone number that is outside of the NANP (North American Numbering Plan), you must dial:
Country Code + City Code + Phone number
For example if you want to call Brazil (country code 55) phone number in Rio de Janeiro (city code 21) you must dial 5521 and phone number.

Phones Supported by Fring for Mobile VoIP calls

Some of the phones supported by Fring to make mobile VoIP calls are Nokia 6630, Nokia 6680, Nokia 6681, Nokia 6682, Nokia E60, Nokia E61, Nokia E61i, Nokia E65, Nokia E70, Nokia N70, Nokia N71, Nokia N72, Nokia N73, Nokia N75, Nokia N76, Nokia N77, Nokia N80, Nokia N90, Nokia N91, Nokia N92, Nokia N93, Nokia N95, Sony Ericsson P1i, Sony Ericsson P990i and virtualy almost any other smybian supported device.

Tuesday, November 1, 2011

தமிழ் திரைப்படங்களை இலவசமாக பார்த்து ரசிக்க.....


 இணையம் என்பது அனைத்துமே கொட்டி கிடக்கும் தகவல் களஞ்சியம். இணையத்தில் இந்த விஷயம் கிடைக்கவில்லை என்று குறை கூறினால் நீங்கள் சரியாக  இணையத்தை தேடவில்லை  என்றே பொருள். இணையத்தில் இல்லை என்பதே இல்லை அனைத்துமே கிடைக்கும் அனால் கொஞ்சம் சிரமம் எடுத்து தேட வேண்டும். இந்த வகையில் நம் தமிழ் திரைப்படங்களை இலவசமாக ஆன்லைனில் காண சிறந்த 10 தளங்கள் கீழே உள்ளது. இந்த தளங்களில் சென்று லேட்டஸ்ட் ரிலீஸ் தமிழ் திரைப்படங்களை ஆன்லைனில் இலவசமாக கண்டு களியுங்கள்.

இந்த தளத்தில் பல புதிய தமிழ் திரைப்படங்களின் வீடியோக்கள் காணப்படுகின்றது. புதிய திரைப்படங்கள் முதல் பழைய திரைப்படங்கள் வரை வரிசைப்படுத்தி வைத்துள்ளனர். இந்த தளத்தில் ஒரு பகுதி முடிந்ததும் அடுத்த பகுதி தானாகவே இயங்கிவிடும். 

இந்த தளத்திலும் பல புதிய படங்கள் காணப்படுகிறது. இந்த தளத்தில் திரைப்படங்களை New Movies, Old Movies, Middle Movies என்று தனித்தனியாக வகை படுத்தி உள்ளனர். இந்த தளத்தில் 90களில் வந்த திரைப்படங்கள் கூட பார்க்க முடிகிறது. 

நீங்கள் இணையத்தில் பழைய திரைப்படங்களை தேடி தேடி அலுத்து போய் விட்டீர்களா ஆம் என்றால் உங்களுக்கான சிறந்த தளம் இது தான். இந்த தளத்தில் பழைய திரைப்படங்கள் கொட்டி கிடக்கிறது. பழைய பட விரும்பிகள் இந்த தளத்தை பயன் படுத்தி கொள்ளுங்கள்.

4) Tamil Peek
இந்த தளத்தில் பல புதிய தமிழ் திரைப்படங்களின் வீடியோக்கள் காணப்படுகின்றது. இந்த தளத்தில் படங்களை புதிய படங்கள் ,பழைய படங்களை என இரு வகையாக பிரித்து வைத்துள்ளனர். தமிழ் திரைப்படங்களை காண இந்த தளமும் சிறந்த தளமாகும்.
5) Tamil tvs.com
இந்த தளத்தில் பல புதிய தமிழ் திரைப்படங்களின் வீடியோக்கள் காணப்படுகின்றது. இந்த தளத்தில் படங்களை புதிய படங்கள் ,பழைய படங்களை என இரு வகையாக பிரித்து வைத்துள்ளனர். தமிழ் திரைப்படங்களை காண இந்த தளமும் சிறந்த தளமாகும்.

6)Good Lanka
இந்த தளத்தில் புதிய மற்றும் பழைய திரைப்படங்களின் வீடியோ பாட்டுக்களை கேட்டு மகிழலாம். அகர வரிசைப்படி படங்களை வரிசைப்படுத்தி உள்ளனர். உங்களுக்கு தேவையான வீடியோ பாட்டுக்களை இந்த தளத்தில் கேட்டு மகிழலாம்.

7) Tube Kolly
இந்த தளத்தில் பல புதிய தமிழ் திரைப்படங்களின் வீடியோக்கள் காணப்படுகின்றது. புதிய திரைப்படங்கள் முதல் பழைய திரைப்படங்கள் வரை வரிசைப்படுத்தி வைத்துள்ளனர். இந்த தளத்தில் ஒரு பகுதி முடிந்ததும் அடுத்த பகுதி தானாகவே இயங்கிவிடும்.

8)TamilVix
இந்த தளத்திலும் பல புதிய படங்கள் காணப்படுகிறது. இந்த தளத்தில் திரைப்படங்களை New Movies, Old Movies, Middle Movies என்று தனித்தனியாக வகை படுத்தி உள்ளனர். இந்த தளமும் இலவசமாக திமில் திரைப்படங்களை காண சிறந்த தளமாகும்.


இந்த தளத்திலும் தமிழ் திரைப்படங்களை இலவசமாக பார்த்து ரசிக்கலாம்.

10) Thiruttu VCD
இந்த தளத்திலும் தமிழ் திரைப்படங்களை இலவசமாக பார்த்து ரசிக்கலாம்.

1 ரூபாயில் இந்தியாவிற்கு பேச – GOOGLE VOICE


இந்தியாவிற்கு பேச 1 ரூபாய்,அமெரிக்கா, கனடாவிற்கு வெறும் 50பைசா மட்டுமே.

எதையும் டவுன்லோட் செய்ய வேண்டியதில்லை.

ஜிமெயிலிலிருந்து நேரடியாக உலகின் எந்த மூலைக்கும் தொடர்பு கொள்ளலாம். 

மிக மிக தெளிவான நெட்வொர்க்.(கணினியில் WINDOWSLINUX, MAC)

மொபைலில் ANDROID, IPHONE, IPAD, IPOD, BLACKBERRY ஆகிய மாடல்களிலும் வேலை செய்கிறது.




தெருக்களில் விற்கும் சில மொக்கையான இன்டர்நேஷனல் காலிங் கார்டுகளை வாங்கி அரைமணி நேரம் டவுன்லோட் செய்து மூன்று மணிநேரம் தொடர்பு கொள்ள முயற்சித்து, ஒன்று இந்தப்பக்கம் கேட்கும், அல்லது அந்தப்பக்கம் மட்டும் கேட்கும். ஒரு நண்பர் இந்தியாவிலிருந்து எனக்கு போன் செய்து சொன்னார் – தயவு செய்து உன் லேப்டாப்பில் இருந்து கூப்பிடாதே!!(என்னே வெறி!)


ஆனால் கூகிள் வாய்ஸ் அப்படியல்ல! கீழுள்ள முகவரிக்குச் சென்று உங்கள் கூகிள் கணக்கில் நுழைந்து குறித்த பட்ச தொகை 10 டாலர் ரீசார்ஜ் (Any Credit card or Debit card பயன்படுத்தி) செய்ய வேண்டும். உங்களுக்கு உறுதிப்படுத்த மெயில் ஒன்று வரும், அதை கிளிக் செய்தால் ஒரு நாளைக்குள் உங்கள் கணக்கில் வரவு வைக்கப்படும்.

எப்படி கால் செய்வது??

ஜிமெயில் கணக்கில் நுழைந்து இடதுபுறம் உள்ள Call Phone கிளிக் செய்தால் போதும் – உலகின் எந்த என்னையும் தொடர்பு கொள்ளலாம்.

சிறப்புகள்:-

 •     ஐந்தே நொடிகளில் அழைக்கும் நபருடன் பேசலாம்
 •           மிக மிகத் தெளிவான வாய்ஸ்.
 •           ஒரே நேரத்தில் பல நபர்களை அழைக்கலாம் (மற்றதை ஹோல்டில் வைத்து)
 •           ஸ்கைப்பை விட குறைந்த கட்டணம் – 1 RUPEE/MIN (0.02 USD)
 •           50 INTERNATIONAL SMS இலவசம்
 •           பேசுவதை ரெகார்ட் செய்து கொள்ளலாம்.
 •           எவ்வளவு நாள் வேண்டுமானாலும் உபயோகிக்கலாம் (தீர்ர வரைக்கும்தானுங்கோ)
 •           PHONEBOOK சேமிக்கும் வசதி.
 •    அமெரிக்கா மற்றும் கனடாவில் வசிப்போர்களுக்கு அவர்களுக்குள் இலவசம்,
 •    மேலும் பல சேவைகள், VOICE MESSAGE & MORE

மற்ற நாடுகளுக்கான கட்டண விபரம் மற்றும் இதர விபரங்களுக்கு :-


Friday, September 16, 2011

இலவச ஆண்ட்டி வைரஸ் AVG 2012


தனிப்பட்ட நபர்கள் தங்கள் கம்ப்யூட்டர்களில் பயன்படுத்த, இன்றும் மிகச் சிறந்த ஆண்ட்டி வைரஸ் புரோகிராம்களில் ஒன்றாக, ஏ.வி.ஜி. ஆண்ட்டி வைரஸ் உள்ளது. இதன் புதிய தொகுப்பான ஏ.வி.ஜி. 2012 அண்மையில் வெளியிடப் பட்டுள்ளது.

கட்டணம் செலுத்தி வாங்கும் தொகுப்பில் உள்ள பெரும்பாலான வசதிகள், இலவச புரோகிராமில் இருப்பது இதன் சிறப்பாகும். ஆண்ட்டி வைரஸ், ஸ்பைவேர், ரூட்கிட்ஸ் மற்றும் ஸ்பேம் மெயில்களைத் தடுக்க என இந்த புரோகிராமில் தனித்தனி தொகுப்புகள் அடங்கியுள்ளன.

இதில் லிங்க் ஸ்கேனர் (Link Scanner) என்று ஒரு கூடுதல் வசதி ஒன்று தரப்பட்டுள்ளது. இது தேடல் முடிவு களையும், இணைய தளங்களுக்கான லிங்க்குகளையும் சோதனை செய்கிறது. இது இந்த புரோகிராமில் மட்டுமே காணப்படும் தனிச் சிறப்பு வசதியாகும்.

2008 ஆம் ஆண்டு ஏ.வி.ஜி. ஆண்ட்டி வைரஸ் புரோகிராமின் செயலாக்கம் மிகவும் மெதுவாக இருந்ததாகப் பலர் குற்றம் சாட்டினார்கள். ஆனால், 2009 மற்றும் அடுத்து வந்த மேம்படுத்தப்பட்ட பதிப்பு களில் பல குறைகள் களையப் பட்டதுடன், நவீன தொழில் நுட்பத்தில் இயங்கும் பல வசதிகள் தரப்பட்டன.

செயல்பாட்டினைப் பொறுத்தவரை, இன்று அவிரா மற்றும் அவாஸ்ட் ஆண்ட்டி வைரஸ் புரோகிராம் களுக்கு இணையாக இது கருதப்படுகிறது.

புதிய 2012 பதிப்பில், புரோகிராம் பைலின் அளவு 50% குறைக்கப் பட்டுள்ளது. இதனால் இணையத் திலிருந்து தரவிறக்கம் செய்வது வேகமாக நடை பெறுகிறது. இன்ஸ்டால் செய்வதும் வேகமாக மேற்கொள்ளப் படுகிறது.


ஹார்ட் டிஸ்க்கில் இந்த புரோகிராம் எடுத்துக் கொள்ளும் இடமும் குறைக்கப் பட்டுள்ளது. ப்ராசசர் இயங்கும் அளவு மற்றும் நினைவகத்தின் இடமும் 20% குறைவாக உள்ளது. 

இணையத்தில் உலாவுகையில் மட்டுமின்றி, ஆன்லைன் சேட் செய்திடும்போதும் வைரஸ், மால்வேர், வோர்ம்ஸ், ஆட்வேர் மற்றும் ஸ்பேம் ஆகியவற்றை எதிர்க்கிறது. எந்த நேரமும் இதற்கான உதவிகள் கிடைக்கின்றன. விண்டோஸ் எக்ஸ்பி உட்பட அனைத்து விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டங்களிலும் இயங்குகிறது. 

இதனை டவுண்லோட் செய்திட நீங்கள் செல்ல வேண்டிய இணைய தள முகவரி:http://avg.en.softonic.com/download

Tuesday, August 30, 2011

சீனா மொபைல்களுக்கான ரகசிய குறியீடுகள் - Secret codes for all china mobiles




இன்று மொபைல் சந்தைகளில் மிகப்பெரிய வரவேற்ப்பை பெற்றுள்ளது இந்த சீன மொபைல்கள். டூப்ளிகேட் செய்வதில் வல்லவர்களான சீனர்கள் பிரபல கம்பெனிகளின் மொபைல்கள் போன்று அச்சு அசலாக உருவாக்கி பத்து மடங்கு விலை குறைவாக கொடுப்பதால் அனைவரும் அது போன்ற போன்களை உபயோகபடுதுகின்றனர். சாதரணமாக குறைந்தது Rs.1000/- ஒரு போன் வாங்கினால் கூட Dual Simcard, Blue tooth, Camera, Audio video players போன்ற அனைத்து வசதிகளையும் கொடுத்து விடுகின்றனர். Tv, 4 Simcard specility இப்படி ஏராளமான வசதிகளை வழங்குவதால் நடுத்தர மக்கள் பெரும்பாலும் இந்த வகை போன்களையே நாடி செல்கின்றனர். 
இந்திய மொபைல் வர்த்தகம் பெரும் பாதிப்படைந்துள்ளது. இன்னும் எவ்வளவோ துறைகளில் சீனா காலை பதித்து விட்டது. சீன விட நாங்க பெரிய ஆளு எங்க கிட்டயும் அது இருக்கு இது இருக்குன்னு வாய் வார்த்தையில் மட்டுமே சொல்லி கொண்டிருக்கையில் சீனா காரன் கிட்ட நம்ம இந்திய வர்த்தகத்தை இழந்து கொண்டிருக்கிறோம். இது எவ்வளவு பெரிய பாதிப்பை ஏற்ப்படுதுமென்று பொறுத்திருந்து பார்ப்போம்.

சரி நம்ம மேட்டருக்கு வருவோம் சீன மொபைல்களில் உபயோகிக்க கூடிய சில ரகசிய குறியீடுகளை கீழே கொடுத்துள்ளேன். உங்களுக்கு தேவையானதை இதன் மூலம் செய்து கொள்ளுங்கள்.


சீன மொபைல்களுக்கான ரகசிய குறியீடுகள்: 
 • Default user code: 1122, 3344, 1234, 5678
 • Engineer mode: *#110*01#
 • Factory mode: *#987#
 • Enable COM port: *#110*01# -> Device -> Set UART -> PS Config -> UART1/115200
 • Restore factory settings: *#987*99#
 • LCD contrast: *#369#
 • Software version: *#800#
 • Software version: *#900#
 • Set default language: *#0000# Send
 • Set English language: *#0044# Send
 • Set English language (new firmware): *#001# Send
 • GM208 (Chinese Nokea 6230+) engineering menu: *#66*#
 • Set Engineer Mode *888*888#
 • Set Engineer Mode *#3646633#
 • Set Engineer Mode ***503#
Codes to Change Screen Language:
 • Set Default Language :  *#0000# + Send 
 • Set Language to Russian:  *#0007# + Send 
 • Set Language to French:  *#0033# + Send 
 • Set Language to Spanish:  *#0034# + Send 
 • Set Language to Italian:  *#0039# + Send
 • Set Language to English:  *#0044# + Send 
 • Set Language to German:  *#0049# + Send
 • Set Language to Thai:  *#0066# + Send
 • Set Language to Vietnamese:  *#0084# + Send
 • Set Language to Arabic:  *#0966# + Send
Codes for Reset Mobile Factory Settings
 • *#987*99#
 • *#77218114#
 • *#881188#
 • *#94267357#
 • *#9426*357#
 • *#19912006#
 • *#118811#
 • *#3646633#
 • *#6804#
 நண்பர்களே சீனா மொபைகளில் ஒவ்வொன்று ஒரு மாடலில் இருப்பதால் இது அனைத்து மொபைகளுக்கும் பொருந்தும் என  உறுதியாக கூற முடியாது.