Search This Blog

Monday, October 25, 2010

பயன் உள்ள சாப்ட்வேர்களின் பற்றிய தொகுப்பு

வணக்கம் இன்றைய நாள் இனிய நாளாக அமைய எனது வாழ்த்துகள்......



தற்போது நாம் காண இருக்கும் மென்பொருள் Recuva.





நீங்கள் சில சமயம் எண்ணியிருகலாம்...தாங்கள் கணினியில் தாங்கள் வேண்டாமென்று அழித்த பைல்களை மீண்டும் பெற்றால் நன்றாக இருக்குமே அல்லது தெரியாமல் அழித்த பைல்களை மீண்டும் பெற்றால் நன்றாக இருக்குமே என்று......

ஒரு வேலை தாங்கள் அழித்த பைல் Recycle Binயில் இருந்தால் நாம் Restore தந்து விடலாம், ஆனால் Recycle Binயில் இல்லையென்றால்.....என்ன செய்வது....!

கவலை வேண்டால் அதற்கு தான் Recuva என்னும் மென்பொருள் உள்ளது.

தாங்கள் கணினியில் நிரந்தரமாக அழித்த அல்லது பென்டிரைவ், மெமரி கார்டு...போன்றவற்றில் அழித்த பைல்களை மீண்டும் பெற Recuva என்னும் மென்பொருள் உதவுகிறது.


இதை உபயோகிக்கும் முறை:

முதலில் இயக்கும் போது தாங்கள் செய்வது...

1. தாங்கள் File Type Optionனை தெர்வு செய்ய வேண்டும்...இதில் தாங்கள் தேடயிருபது Pictures or Music or Documents or Video or Other என்பதை தெர்வு செய்ய வேண்டும்.....பின்னர் Next என்பதை Click செய்க...


2. அடுத்தது தாங்கள் File Locationனை தெர்வு செய்ய வேண்டும்...இதில் Removable Drivers(Pendrive,Memory card etc..) or My documents or Recycle Bin or Other location எதையாவது ஒன்றை தாங்கள் தேர்வு செய்ய வேண்டும்...பின்னர் Next என்பதை தெர்வு செய்ய வேண்டும்..









3. பின்னர் Start என்பதை Click செய்யவும்....சிறிது நேரம் தாங்கள் கணினியை Recuva Scan செய்யும். பின்னர் தாங்கள் அழித்த பைல்களை மீண்டும் பெறலாம்....








Download This Software PLz Click HereRecuva Free Download

Saturday, October 23, 2010

தங்கள் கணினியில் வைரஸ் புகுந்துவிட்டதா!

System Restore (சிஸ்டம் ரீஸ்டோர்)

வணக்கம் நண்பர்களே!   தங்கள் கணினியில் வைரஸ் புகுந்துவிட்டதா! கவலை வேண்டாம்....

என்ன தான் ஆன்டிவைரஸ் பயன்படுத்தினாலும் சில சமயம் நம் கணினியை வைரஸ் முடக்கி விடுகிறது.....

அச்சமயத்தில் தாங்கள் என்ன செய்ய முடியும்.......கவலை வேண்டாம் அதற்கு தான் System Restore
என்னும் ஒரு வழி உள்ளது...

இவ்வழி சிலருக்கு தெரிந்ததே...! ஆயினும் தெரியாதவர்களுகாக...இச்செய்தி..!




System Restore என்ற உடனே தாங்களுக்கு புரிந்து இருக்கும்....ஆம் தாங்கள் நினைத்தது சரியே!... வைரஸ்சால் முடக்கபட்ட கணினியை மீண்டும் பழைய நிலைக்கு கொண்டு வருவது தான்....

இதை எப்படி மேற்கொள்வது.....

முதலில் உங்கள் கணிணியை இயக்குங்கள்...உங்களுக்கு திரை வரவில்லை என்றால் Safe Mode இயக்குங்கள்... எப்படி என்றால்......உங்கள் கணினியை ஆன் செய்த உடனே F8 Key யை அழுத்துங்கள் ..உடனே ஒரு Window வரும்...அதில் Safemode  என்பதை தெர்ந்துடுங்கள்...

தற்போது...தாங்கள் கணினியில் Control Panelலை Click செய்க..பின்னர் அதில் Performance and Maintenance என்பதை Click செய்க...அதன் இடதுகை ஓரத்தில் System Restore என்பதை Click செய்க...தற்போது தான் கவனம் தேவை....தாங்களுக்கு தற்போது..System Restore என்னும் Window வந்துருக்கும்...

அதில் மூன்று Optionகள் இருக்கும்..தாங்கள் Restore my computer to an earlier time என்பதை தேர்வு செய்யவும்...தாங்கள் தேர்வு செய்தவுடன் calender போன்று ஒரு window வரும்...அதில் தாங்கள் தங்கள் கணினியில் மாற்றங்கள் செய்த தேதிகள் மட்டும் அழுதமாக (Dark) தெரியும்..தாங்கள் அதில் எப்போது தாங்கள் கணினி நன்றாக இயங்கியதோ..அதை தேர்வு செய்து பின்னர் Next என்பதை Select செய்யவும்.

அவ்வளவு தான் தாங்கள் கணினி நீங்கள் தேர்வு செய்த தேதிக்கு சென்றுவிடும்...(Restore ur computer to tat date)..

Monday, October 18, 2010

நமக்கு இமெயில் அனுப்பியவரின் விவரங்கள் அறிய

இணையத்தில் பல நிறுவனங்கள் இலவச ஈமெயில் சேவையை தருவதனால் பல பேர் அந்த சேவையை பயன்படுத்தி நம் நண்பர்களுக்கோ அல்லது உறவினர்களுக்கோ இமெயில் அனுப்புகிறோம். இது மட்டுமில்லாமல் நமக்கு தெரியாதவர்கள் மற்றும் சில மோசடி கும்பல்களிடம் இருந்து கூட இமெயில்கள் வந்து கொண்டு இருக்கிறது. இப்படி அனுப்பப்படும் ஈமெயில்கள் எங்கிருந்து யாரால் அனுப்பபடுகிறது என இங்கு அறிந்து கொள்வோம்.
நமக்கு ஈமெயில் அனுப்பியவரின் விவரம்:
  • இதற்க்கு நமக்கு Spokeo என்ற தளம் நமக்கு உதவி புரிகிறது. இந்த தளம் செல்ல இந்த லிங்கில் http://www.spokeo.com செல்லவும்.

  • இந்த தளம் சென்றவுடன் உங்களுக்கு மேலே இருப்பதை போல விண்டோ வரும்.
  • அதில் உங்களுக்கு தெரியும் காலி இடத்தில் நீங்கள் தகவல் பெற விரும்பும் இமெயில் ஐடியை கொடுத்து அருகே உள்ள SEARCH என்ற அழுத்தவும்.
  •  உங்களுக்கு உங்கள் மெயில் ஐடி ஸ்கேன் ஆகி தகவல்கள் தெரியும். 
  • ஒருமுறை நீங்கள் உங்கள் மெயில் ஐடியை கொடுத்து உபயோகித்து பாருங்கள். உங்களுக்கே வியப்பாக இருக்கும். 
FRIENDS:

  • இந்த தளத்தில் இன்னொரு சிறப்பான வசதி நம் மெயில் இந்த friends என்ற வசதி. இந்த வசதியின் மூலம் நம் மெயிலில் உள்ள நண்பர்களின் விவரங்களை அறிந்து கொள்ளமுடியும்.

  • நண்பரே இதில் நீங்கள் உங்கள் பிளாக்கர் மெயில் ஐடியை உபயோகிக்க வேண்டாம். இந்த தளம் பாதுகாப்பு வாய்ந்தது என்று தெரியவில்லை. கவனமாக இருப்பதே நல்லது. 

இந்த தளத்தில் மேலும் சில வசதிகள் இருந்தாலும் (NAME FINDER, PHONE FINDER) இவைகள் சரியாக இயங்கவில்லை. ஆகையால் அவைகளை பற்றி இங்கு விளக்கவில்லை.

பழைய விண்டோஸ் XP கணினியிலிருந்து புதிய விண்டோஸ் 7 க்கு Easy Transfer

நம்மில் பலர்,  பல வருடங்களாக விண்டோஸ் XP பயன்படுத்தி வந்திருக்கிறோம். சில வருடங்களுக்கு முன்பாக விண்டோஸ் விஸ்டா சந்தைக்கு வந்தபொழுது, பலரும் மாற்றத்தை விரும்பாமல், விண்டோஸ் XP யே வசதியாக உள்ளது என்று விஸ்டாவை ஒதுக்கி விட்டோம். சமீப காலமாக விண்டோஸ் 7 பலரையும் கவர்ந்துள்ளதாலும், புதியதாக வாங்கும் மடிக்கணினிகள் பலவும் விண்டோஸ் 7 நிறுவப்பட்டு விற்பனைக்கு வருவதாலும் விண்டோஸ் 7 இயங்குதளத்திற்கு மாறியாக வேண்டியுள்ளது. 

இச்சமயத்தில், நமது பழைய விண்டோஸ் XP கணினியில் உள்ள நமது Profile, கோப்புகள், செட்டிங்ஸ் ஆகியவற்றை புதிய விண்டோஸ் 7 இயங்குதளம் உள்ள கணினி அல்லது மடிக்கணினிக்கு External Drive அல்லது USB Flash Drive கொண்டு, எப்படி Migrate செய்வது என்பதை பார்க்கலாம்.

முதலில் விண்டோஸ் 7 நிறுவப்பட்டுள்ள கணினியில் Start சென்று Getting Started க்ளிக் செய்து Transfer your Files ஐ க்ளிக் செய்யுங்கள்.


அடுத்து திறக்கும் Windows Easy Transfer திரையில் An external hard disk or USB flash drive பொத்தானை அழுத்தி, அடுத்த திரையில்  This is my new Computer பொத்தானை சொடுக்குங்கள்.

அடுத்து திறக்கும் திரையில், "Has Windows Easy Transfer already saved your files from your old computer to an External Hard disk or USB Flash Drive?" என்ற கேள்விக்கு No பொத்தானை சொடுக்குங்கள். அடுத்த திரையில் "Do you need to install Windows Easy Transfer on your Old Computer?" எனும் கேள்விக்கு, “I need to install it now” ஐ க்ளிக் செய்யுங்கள்.


இந்த சமயத்தில் உங்கள் External Hard Disk ஐ கணினியில் பொருத்தி விடுங்கள். அடுத்த திரையில், நீங்கள் உபயோகிப்பது External Hard disk ஆக இருந்தால், “External hard disk or shared network folder” எனவும், USB Flash Drive ஆக இருந்தால், "USB Flash Drive" என்வும் தேர்வு செய்து கொள்ளுங்கள்.

இப்படியாக Windows Easy Transfer ஐ உங்கள் External Hard disk -இல் காப்பி செய்த பிறகு, உங்கள் பழைய கணினியில் பதிய சொல்லி செய்தி வரும். 

இனி external hard drive ஐ உங்கள் பழைய விண்டோஸ் XP கணினியில் பொறுத்தி, external hard drive லிருந்து Windows Easy Transfer ஐ இயக்குங்கள்.


Next பொத்தானை சொடுக்கி,  அடுத்த திரையில், “An external hard disk or USB flash drive” என்பதை க்ளிக் செய்யுங்கள்.


அடுத்த திரையில், உங்களுக்கு தேவையான, கோப்புகள், செட்டிங்ஸ், அவுட்லுக் மின்னஞ்சல்கள், பேவரட்ஸ் ஆகியவற்றை தேர்வு செய்து பின்னர், Next கொடுங்கள். (Advanced லிங்கை க்ளிக் செய்து, தேவையற்ற Temp கோப்புகளை நீக்கி, தேவையான கோப்புகளை மட்டும் தேர்வு செய்து கொள்ளலாம். இதில் ஏற்கனவே XP கணினியில் நிறுவப்பட்டுள்ள மென்பொருட்களை காப்பி செய்ய கூடாது)
அடுத்ததாக இந்த பேக்கப்பிற்கு கடவு சொல் ஏதேனும் கொடுக்க விருப்பமிருந்தால் கொடுத்து, Save பொத்தானை சொடுக்குங்கள். இவையனைத்தும் சரியாக பேக்கப் ஆன பிறகு, உறுதி செய்தியும் வந்த பிறகு, இந்த External Hard Disk அல்லது USB Flash Drive ஐ உங்கள் புதிய விண்டோஸ் 7 கணினியில் பொருத்தி Windows Easy Transfer ஐ திறந்து, முதல் திரையில் “Yes" பொத்தானை சொடுக்குங்கள்.






External Drive இல் பேக்கப் கோப்பு எங்கு சேமிக்கப்பட்டுள்ளது, என்பதை தேர்வு செய்து கொடுங்கள். 




இப்பொழுது நீங்கள், பேக்கப் எடுத்த அனைத்து கோப்புகளையுமோ, அல்லது தேவையான குறிப்பிட்ட கோப்புகள் மற்றும் செட்டிங்ஸ் களையோ தேர்வு செய்து ட்ரான்ஸ்பர் செய்து கொள்ளலாம்.


அவ்வளவுதான், உங்கள் எக்ஸ்பி கணினியிலிருந்து, விண்டோஸ் 7 கணினிக்கு, உங்கள் கோப்புகள் மற்றும் செட்டிங்ஸ் அனைத்தும் ட்ரான்பர் ஆகி விட்டது.


இதே போல நெட்வொர்க் உள்ள எக்ஸ்பி மற்றும் விண்டோஸ் 7 கணினிகளில், தனியாக ட்ரைவ் ஏதுமின்றி, ட்ரான்ஸ்பர் செய்ய இயலும்.

விண்டோஸ் பழுதுபார்ப்பு!

விண்டோஸ் எக்ஸ்பி இயங்குதளம் உபயோகிப்பவர்கள் அவ்வப்போது, தங்களது கணினி பூட் ஆகும் பொழுது, விண்டோஸ் லோடு ஆகும் திரை வந்த பிறகு, உடனடியாக ரீஸ்டார்ட்  ஆகும் பிரச்சனையை சந்தித்து இருக்கலாம். 


இப்படி முதல் முறை ரீஸ்டார்ட்  ஆகி மறுபடி பூட் ஆகும் பொழுது Safe mode ஆப்ஷனோடு திரை வந்திருக்கும். 
இதில் Safe mode இல் சென்றாலும், Last known Good Configuration -இல் சென்றாலும், இதே போன்று தொடர்ந்து ரீஸ்டார்ட் ஆகிக் கொண்டிருக்கும், உள்ளே இருக்கும் உங்களது முக்கியமான டேட்டாக்கள் ஏதாவது ஆகிவிடுமோ என்ற பயம் வருவது இயற்கை. 

சரி, விண்டோஸ் சீடியை வைத்து பூட் செய்து இந்த இயங்குதளத்தின் மேலேயே over write செய்து விடலாம் என்று முயலும் போது, அங்கேயும் ஆப்பு காத்திருக்கும்.  விண்டோஸ் சீடியில் பூட் செய்து முதலாவது Repair ஆப்ஷனை தவிர்த்து  Agreement பக்கத்திற்கு அடுத்து வரும் திரையில் கீழே உள்ளது போல உங்கள் விண்டோஸ் பார்ட்டிஷன் காண்பிக்கப்பட்டால் 'R' கீயை அழுத்தி ரிப்பேர் செய்து கொள்ளலாம். 


 ஆனால், விண்டோஸ் ரிப்பேர் வசதியில் செல்லும் போது உங்கள் விண்டோஸ் பார்ட்டிஷனை Unknown partition என்றோ அல்லது விண்டோஸ் ஏற்கனவே நிறுவப்படாத மற்ற பார்ட்டிஷன்களை போலவே உங்கள் விண்டோஸ் பார்ட்டிஷனும் பட்டியலிடப்பட்டிருக்கும். இது போன்ற நிலை வரும்பொழுது சற்று சிக்கல்தான். 

முதலாவதாக நாம் நினைவில் கொள்ள வேண்டியது. இந்த நிலைக்கு முந்தைய வரலாறு (வரலாறு மிக முக்கியம் அமைச்சரே!..) அதாவது இந்த ரீஸ்டார்ட் பிரச்சனை வருவதற்கு முன்பாக என்ன நிகழ்ந்தது? முழுவதுமாக ஷட் டவுன் ஆவதற்கு முன்பாக பவரை அனைத்து விட்டீர்களா? அல்லது கரண்டு போய்விட்டதா? யாராவது Reset பட்டனை அழுத்திவிட்டு போய் விட்டார்களா? அல்லது இதில் ஏதுமில்லையா? 

இந்த கேள்வியெல்லாம் எதற்கு? என்றால், இது போன்ற ரீ ஸ்டார்ட் பிரச்சனை பெரும்பாலும் பூட் பார்ட்டிஷனில் கோப்புகள் கிராஸ் லிங்க் ஆகிவிடவதால் ஏற்படுபவை, அல்லது (மிக அரிதாக) உங்கள் வன்தட்டிற்கு வயதாகி கொண்டிருக்கிறது அல்லது (மிகமிக அரிதாக) பிராசசர் ஃபேனில் தூசி அதிகம் படிந்து, ஃ பேனின் வேகம் குறைந்தது  என்றும் கொள்ளலாம். கிராஸ் லிங்க் ஆவதற்கு முக்கிய காரணம் முறையாக ஷட் டவுன் செய்யாமலிருப்பது.

இந்த பிரச்சனை வரும் பொழுது எடுத்தவுடனே விண்டோஸ் Over write செய்து விடலாம் அல்லது புதிதாக வேறு ட்ரைவில் நிறுவிவிடலாம் என்ற முடிவிற்கு வருவதற்கு முன்பாக, விண்டோசின் தாத்தா DOS கருவியான Chkdsk ஐ பயன்படுத்தி இந்த பிரச்னைக்கு விரைவாகவும், எளிதாகவும் தீர்வு காண்பது எப்படி என்று பார்க்கலாம். 

விண்டோஸ் பூட் சீடியை வைத்து உங்கள் கணினியை பூட் செய்து கொள்ளுங்கள். பிறகு முதலாவதாக வரும் Repair திரையில் 'R' கீயை அழுத்தி Recovery Console திரைக்கு வந்து விடுங்கள். 

     
இந்த பிரச்சனை உள்ள கணினிகளில், விண்டோஸ் பார்ட்டிஷன் உள்ள ட்ரைவை குறிப்பிடும்படி கேட்காது. தேர்வு செய்ய சொல்லி வந்தால் தேர்வு செய்து கொள்ளுங்கள். அடுத்து, C:\> ப்ரோம்ப்டில் CHKDSK /R கட்டளை கொடுக்கலாம். ஒரு சில சமயங்களில் இந்த கட்டளை இயங்காமல் போனால், CD/DVD   ட்ரைவிற்கு   சென்று (உதாரணமாக g:) அங்கு CD\i386 கட்டளை கொடுத்து அந்த டைரக்டரிக்கு சென்று அங்கு CHKDSK கட்டளையை கொடுங்கள். 


இது முடிந்த உடன் Exit கொடுத்து கணினியை ரீ ஸ்டார்ட் செய்து விட்டால் போதுமானது. கிராஸ் லிங்க ஆன சிஸ்டம் கோப்புகள் அனைத்தும் சரி செய்யப்பட்டு, கணினி முன்பு போல இயங்கும்.  பெரும்பாலான கணினிகளில் இந்த வழியை பயன்படுத்தி விண்டோஸ் எக்ஸ்பி ரீ ஸ்டார்ட் பிரச்சனையை சரி செய்யப் பட்டுள்ளது.

Thursday, October 14, 2010

Solve Your Generic Host 32 Problems

Regedit->System->Current Control Set->Services->Net BT ->Parameters->Trandbindname=//Device// (delete)



First Go -To Start->Run ->Regedit->HKey local Machine->Microsoft->Ole->Enable Com ->Y Change to N