Search This Blog

Wednesday, August 29, 2012

Online Mobile Backup...


மொபைல் டேட்டா அழிந்து போனால்!

 இன்றைய உலகில் மொபைல் போன் பல்வேறு பணிகளுக்கான ஒற்றைச் சாதனமாக செயல்படுகிறது.
போன், பாடல், வீடியோ, போட்டோ, இன்டர்நெட், இமெயில், இணைய பயன்பாடு, இடம் அறிதல், வழி நடத்தல், வங்கிக் கணக்குகளைக் கையாளுதல், மெசேஜ்கள், காண்டாக்ட்ஸ், மீடியா தகவல்கள் என இதன் மூலம் மேற்கொள்ளும் செயல்பாடுகளை அடுக்கிக் கொண்டே போகலாம்.

அப்படிப்பட்ட நிலையில், ஒரு மொபைல் போனில் உள்ள தகவல்கள் அழிந்து போனால், போன் தொலைந்து போனால், மீண்டும் பார்மட் செய்யப்பட வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டால் என்னவாகும்? நம் அன்றாட வாழ்க்கையே ஸ்தம்பித்துவிடும் அல்லவா?

சில போன்களில் பி.சி. சூட் , Sony Ericsson Pc Companion என்ற சாப்ட்வேர் தரப்பட்டு, அதன் மூலம் நம் தகவல்களைக் கம்ப்யூட்டருக்கு மாற்றிப் பின் மீண்டும் பெற்று பயன்படுத்தக்கூடிய வசதி தரப்பட்டுள்ளது. ஆனால் இந்த வசதி அனைத்து போன்களுக்கும் கிடைப்பதில்லை.

இதே போல ஆன்லைனில் சேமித்து வைக்கக் கூடிய வசதி ஒன்றினை ஓர் இணைய தளம் தருகிறது. இந்த சேவையின் பெயர் rSeven. இதனை http://www.rseven.com/ என்ற முகவரியில் உள்ள இணைய தளத்திலிருந்து Download செய்து, மொபைல் போனில் பதியவும்.

இந்த சாப்ட்வேர் வசதியும் சில ஆப்பரேட்டிங் சிஸ்டங்கள் உள்ள மொபைல்களில் மட்டுமே செயல்படுகிறது. விண்டோஸ் மொபைல் பதிப்பு 6 மற்றும் அடுத்து வந்தவை, சிம்பியன்எஸ்60, மூன்றாவது மற்றும் ஐந்தாவது எடிஷன் ஆகியவற்றில் மட்டுமே இது செயல்படுகிறது.

இதனைப் பதிந்தவுடன் மிக எளிதாக, மொபைல் போனில் உள்ள அனைத்து டேட்டாவினையும், இந்த தளத்தில் பதிந்து வைத்து, இவை தொலைந்து போகும் காலத்தில் மீண்டும் பெற்றுப் பயன்படுத்தலாம்.

Thursday, August 2, 2012

உங்கள் குழந்தைகளை இணையம் தரும் தீமைகளிலிருந்து பாதுகாக்க...


இளம் மாணவர்களுக்கு அரசு லேப்டாப் கம்ப்யூட்டர்களை வழங்குகிறது. அரசு தரும் கம்ப்யூட்டரில் இணைய இணைப்பு வசதி இலவசமாக இல்லை என்றாலும், நிச்சயம் பெற்றோர்கள் அவற்றை வாங்கிக் கொடுப்பார்கள் என்பதில் சந்தேகம் இல்லை.

இன்றைய உலகில் கற்றுக் கொள்வதற்கும் அறிவுத் தேடலுக்கும் முதல் தேவை இணைய இணைப்பும், இணையத் தேடலும் தான்.

இதில் அபாயம் தரும் இன்னொரு பக்கமும் உள்ளது. முற்றிலும் கட்டற்ற இணையம் சிறுவர்களுக்கு அபாயகரமானது. பாலியல் தளங்களும், வன்முறையை போதிக்கும் தளங்களும் இணையத்தில் நிறைந்து கிடக்கின்றன.

இவற்றைப் பார்க்காதே என்று ஒரு காவலாளி போல சிறுவர்களை எந்நேரமும் கட்டுப்படுத்துவது இயலாது. மேலும் வரையறைகளை அமைப்பது இன்றைய டிஜிட்டல் உலகில் பெற்றோர்களுக்கும் சற்று சிரமமான செயல்பாடாக உள்ளது. இயலாததும் கூட. பெற்றோர் தடை இடுகையில் அதனை மீற வேண்டும் என்ற இயல்பு சிறுவர்களுக்கு இயல்பாகவே தோன்றுவது இயற்கையே.

இந்தச் சூழ்நிலையைச் சமாளிக்க நமக்கு K9 Web Protection என்னும் புரோகிராம் நமக்கு உதவுகிறது. இணையத்தில் இலவசமாகக் கிடைக்கும் இந்த புரோகிராம், வீடுகளில் பயன்படுத்தும் கம்ப்யூட்டர்களில், இணையத்தில் பெற்றோர் கட்டுப்படு விதிக்க உதவுகிறது. உங்கள் பெர்சனல் கம்ப்யூட்டரில் உள்ள இணையத்தை உங்கள் கட்டுப்பாட்டிலேயே, நீங்கள் அருகில் இல்லாத சூழ்நிலையிலும், வைத்திருக்க உதவுகிறது.

உங்கள் குழந்தைகளை இணையம் தரும் தீமைகளிலிருந்து பாதுகாக்க உதவிடும் இதன் சிறப்பம்சங்களாவன:

பாலியல், போதை மருந்து, தனிநபர் டேட்டிங், வன்முறையைப் போதிப்பது, வெறுப்பினை வளர்ப்பது, இனவேறு பாட்டினைத் தூண்டுவது என 70க்கும் மேற்பட்ட பல்வேறு பிரிவுகளாக, இணைய தளங்களைப் பிரித்து வைத்து தடுக்கலாம்.

குழந்தைகளின் வயதின் அடிப்படையில், தடுப்பு நிலைகளை அமைக்கலாம். அனைத்து தேடல் சாதனங்களிலும், SafeSearch என்ற ஒன்றை இயக்கி வைக்கலாம். குறிப்பிட்ட நேரத்தில் இணையத் தொடர்பினை ஏற்படுத்த இயலாமல் செட் செய்திடலாம்.

"எப்போதும் அனுமதி' மற்றும் "எப்போதும் தடை செய்திடு' என இருவகைகளாக இணைய தளங்களைப் பிரித்து அமைக்கலாம். பெற்றோர் அமைத்திடும் பாஸ்வேர்ட் மற்ற பாஸ்வேர்ட்களையும் மீறி இருக்கும் வகையில் அமைக்கலாம்.

கம்ப்யூட்டர் தொழில் நுட்பம் சற்று அதிகம் தெரிந்து பயன்படுத்துபவர்கள் கூட, மீட்டெடுக்க முடியாத தடைகளை உருவாக்கலாம். தடை செய்யப்பட்ட தளங்களைப் பார்த்தால், அது குறித்த அறிக்கை தரும்படி அமைத்திடலாம். விண்டோஸ் மட்டுமின்றி, மேக் கம்ப்யூட்டர்களில் இயங்கும் வகையிலும் இது தரப்படுகிறது.

K9 Web Protection என்ற இந்த புரோகிராம், மைக்ரோசாப்ட் விண்டோஸ் 7, விண்டோஸ் விஸ்டா, விண்டோஸ் எக்ஸ்பி, மேக் ஓ.எஸ். எக்ஸ் 10.4.7 மற்றும் அதற்கும் மேற்பட்ட சிஸ்டங்களில் இயங்குகிறது.

இதனை டவுண்லோட் செய்து இன்ஸ்டால் செய்திட முயற்சிக்கையில் லைசன்ஸ் கீ தரும்படி இந்த புரோகிராம் கேட்கும்.

லைசன்ஸ் கீயினை இலவசமாக,http://www1.k9webprotection.com/getk9webprotectionfree என்ற முகவரியில் உள்ள இணைய தளத்தில் பெற்றுக் கொண்டு பயன்படுத்தலாம்