Search This Blog

Friday, November 30, 2012

ஜிமெயில் மூலம் 10ஜிபி அளவுள்ள பைல்கள் வரை அனுப்பலாம்


கூகுள் வழங்கும் ஜிமெயில் இமெயில் சேவையே உலகளவில் ஏராளமானோர் பயன்படுத்தி வருகின்றனர். இமெயில் அனுப்புவது மற்றும் பெறுவது மட்டும் அல்லாமல் இந்த இமெயிலில் இணைத்து பைல்களையும் அனுப்புவர் மற்றும் பெறுவர். ஆனால் இதுவரை ஜிமெயிலில் இமெயி்ல் அனுப்பும் போது 25எம்பி அளவு மட்டுமே 
பைல்களை அனுப்ப முடியும். அதனால் பெரிய அளவு கொண்ட பைல்களை ஜிமெயிலில் அனுப்ப முடியாது.

ஆனால் இனிமேல் ஜிமெயில் மூலம் 10ஜிபி அளவுள்ள பைல்கள் வரை அனுப்பலாம் என்று கூகுள் தற்போது அறிவித்திருக்கிறது. இந்த அறிவிப்பு ஜிமெயில் உறுப்பினர்களுக்கு கண்டிப்பாக இனிப்பான செய்தியாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.
இந்த புதிய வசதிக்காக ஜிமெயிலோடு கூகுள் ட்ரைவை இணைத்திருக்கிறது கூகுள். இதனால் ட்ரைவ் மூலம் நேரடியாக பைல்களை இணைத்து ஜிமெயில் மூலம் அனுப்ப முடியும். இதன் மூலம் 10ஜிபி வரை பைல்களை அனுப்ப முடியும். மேலும் இந்த 10ஜிபி என்பது பழைய 25 எம்பியைவிட 400 மடங்கு அதிகமாகும். மேலும் இந்த வசதியைப் பெற ஜிமெயில் உறுப்பினர்கள் ஜிமெயிலின் அப்டேட் வெர்சனைப் பயன்படுத்த வேண்டும்.
மேலும் பைல்களை அனுப்பும் போது ஜிமெயில் அவற்றை மீண்டும் ஒரு முறை பரிசோதனை செய்யும் என்று கூகுளின் தயாரிப்பு மேலாளர் பில் ஷார்ப் தெரிவித்திருக்கிறார்.
மெயிலை அனுப்புவதற்கு முன்பாக ஜிமெயிலில் உள்ள ட்ரைவ் ஐகனை க்ளிக் செய்து அதன் மூலம் பைல்களை இணைத்து அனுப்ப வேண்டும். இந்த வசதியை இன்னும் சில நாள்களில் கூகுள் களமிறக்க இருக்கிறது

No comments:

Post a Comment