Search This Blog

Thursday, March 11, 2010

Windows Azure Latest Downloading Application


வெகு காலமாக எதிர்பார்த்து வந்த ஆன்லைன் சாப்ட்வேர் அப்ளிகேஷன் சேவையினை மைக்ரோசாப்ட் வரும் புத்தாண்டு முதல் தர முடிவு செய்துள்ளது. ஜனவரி 1 முதல் விண்டோஸ் அஸூர் க்ளவுட் கம்ப்யூட்டிங் என்ற பெயரில் இந்த சேவை கிடைக்கும்.
இன்டர்நெட் மூலம் தங்களுக்குத் தேவையான சாப்ட்வேர் அப்ளிகேஷன் தொகுப்புகளையும், பைல்கள் சேவ் செய்து வைக்க டிஸ்க் இடத்தையும் பெற தற்போது மக்கள் விரும்பு கின்றனர். இதனால் பல தொல்லைகளிலிருந்து விடுபடுகின்றனர். எனவே இன்டர்நெட் சேவையினைக் கட்டணம் செலுத்திப் பெறுவது போல, இந்த சேவைகளையும் ஆன்லைனிலேயே பெற்றுப் பயன்படுத்த விரும்புகின்றனர். இந்த எதிர்பார்ப்பினை மைக்ரோசாப்ட் முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ள திட்டமிட்டு, ஓராண்டுக்கு முன் பரீட்சார்த்த அடிப்படையில் தந்து வந்தது. தற்போது இதனை முழுமையான கட்டமைப்பில் தர முடிவு செய்து, ஜனவரி 1 முதல் இதில் இறங்குகிறது. சென்ற வாரம் நடைபெற்ற மைக்ரோசாப்ட் சாப்ட்வேர் வல்லுநர்களின் ஆண்டுக் கூட்டத்தில், அப்பிரிவின் தலைவர் ரே ஓஸி அறிவித்தார்.
முதல் மாதத்தில் இந்த சேவை இலவசமாக வழங்கப்படும். பிப்ரவரி முதல் பயன்படுத்தப்படும் சேவைகளுக்கு மட்டும் கட்டணம் செலுத்த வேண்டியதிருக்கும். இந்த ஆன்லைன் சாப்ட்வேர் மற்றும் சேவை துறையில் மைக்ரோசாப்ட் நிச்சயம் பெரிய அளவில் இயங்க முடியும். தாமதமாகத்தான் இதனை மைக்ரோசாப்ட் இயக்க முன் வந்துள்ளது. ஏற்கனவே அமேஸான் (Amazon.com Inc) கட்டணம் பெற்றும் கூகுள் இலவசமாகவும் இந்த சேவையினை ஓரளவிற்கு வழங்கி வருகின்றனர்.


பாதுகாப்பான கம்ப்சயூட்டிங் வழிகள்
1. திடீர் திடீரென எழுந்து வரும் பாப் அப் விளம்பரங்களிலிருந்து பொருட்களை வாங்க முயற்சிக்க வேண்டாம். ஸ்பேம் மெயில்களில் வரும் விளம்பரங்கள் எல்லாம் வேறு எதற்கோ உங்களை மாட்ட வைத்திடும் விளம்பரங்களே.
2. உங்களுடைய இமெயில் முகவரி, இல்ல முகவரி, பேங்க் அக்கவுண்ட் எண், அதன் இணையதளத்தில் நீங்கள் பயன்படுத்தும் பெயர், பாஸ்வேர்ட் மட்டுமின்றி, உங்களுக்குத் தெரிந்த மற்றவர்களின் மேற்படி தகவல்களையும் வெப்சைட்டில் தரும் முன் பலமுறை யோசிக்கவும். உங்கள் பணம் சார்ந்த தகவல்களை தரவே வேண்டாம்.
3. மாதத்தின் ஒவ்வொரு இரண்டாவது செவ்வாய்க் கிழமையும் மைக்ரோசாப்ட் நிறுவனம் தன் வெப்சைட்டில் தரும் பேட்ச் பைல்களைக் கொண்டு, உங்கள் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தினை அப்டேட் செய்திட மறக்க வேண்டாம்.
4. ஆண்ட்டி வைரஸ் தொகுப்பு இன்ஸ்டால் செய்து இயக்காமல் இன்டர்நெட் தளங்களை பிரவுஸ் செய்திட வேண்டவே வேண்டாம். அண்மைக் காலத்திய அப்டேட் வரை பெற்ற பின்னரே,கம்ப்யூட்டரை ஸ்கேன் செய்திடவும்.
5. பயர்வால் ஒன்றை இன்ஸ்டால் செய்திடாமல் இன்டர்நெட் பிரவுசிங் மேற்கொள்ள வேண்டாம்.
6. மற்றவர்களின் கிரெடிட் கார்ட் எண், பேங்க் அக்கவுண்ட் எண் இவற்றைத் தெரிந்து கொள்ள முயற்சிக்க வேண்டாம். இது வீணான பழியையும் கொண்டு வந்து சேர்க்கும்.
7. இணையத்தில் உங்கள் பேங்க் அக்கவுண்ட் சார்ந்த தகவல்களைப் பயன்படுத்துகையில், அந்த தளம் தோன்றுகையில் டாஸ்க் பாரின் சிறிய பேட் லாக் போன்ற படம் தெரிந்தால் மட்டுமே தரவும். அல்லது அதன் முகவரியில் அந்த தளம் பாதுகாப்பானது என்பதற்கான அடையாளத்தைத் தேடவும். பெரும்பாலும் இதன் முகவரிகள் https: என எஸ் (s) என்ற எழுத்தையும் சேர்த்துக் கொண்டு தொடங்கும்.
8.நைஜீரியா அல்லது மற்ற பிரபலமாகாத நாடுகளின் பேங்கர்கள் அல்லது பிரதிநிதிகள் என்று சொல்லிக் கொண்டு உங்களுக்கு வரும் இமெயில்களைப் படிக்காமலேயே நீக்கிவிடுங்கள்.
9.இதனை பார்வேர்ட் செய்திடுங்கள் என்று வரும் மெயில்களை அலட்சியம் செய்துவிடுங்கள். உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு அனுப்பி கெட்ட பெயர் எடுக்காதீர்கள். எல்லாம் ஏமாற்றுவேலை.
10. உங்கள் மற்றும் உங்கள் குடும்ப உறுப்பினர்களின் பிறந்த நாள் மற்றும் முக்கிய நாட்களின் தேதிகளை பாஸ்வேர்டாகப் பயன்படுத்த வேண்டாம்.
இது என்ன பத்து கட்டளையா? என்று கேட்கிறீர்களா! இன்னமும் சில பாதுகாப்பிற்கான வழிகள் உள்ளன. ஆனால் குறைந்த பட்சம் இதனைப் பின்பற்றவும்

1 comment: