Search This Blog

Monday, March 28, 2011

மைக்ரோசாப்ட் Mathematics 4.0


மைக்ரோசாப்ட் மேதமடிக்ஸ்

கிராபிகல் கால்குலேட்டர் ஒன்றைப் பயன்படுத்த விரும்புபவர்களுக்கு மைக்ரோசாப்ட் மேதமடிக்ஸ் 4 என்ற ஆட் ஆன் புரோகிராம் உதவுகிறது. இதில் நாம் கணிதச் செயல்பாடுகளை (equations) அமைக்கையில், ஒவ்வொரு நிலையாக அவை எப்படி செயல்படுகின்றன எனக் காணலாம்.

இதனால், இந்தச் செயல்பாடுகள் எப்படி கணக்கிடுதலை மேற்கொள்கின்றன என்பதைக் கண்டறி யலாம். இது கற்கின்ற மாணவர்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும்.

மேலும் இந்த கால்குலேட்டரில் பல ஈக்குவேஷன்கள் பதியப்பட்டே கிடைக் கின்றன. குறிப்பாக ஜியோமெட்ரி மற்றும் கெமிஸ்ட்ரி பாடங்களுக்கானவை நிறைய கிடைக்கின்றன.

நம் தேவைக்கேற்ப செட் செய்திட real and complex numbers, degrees, radians அல்லது gradians, ஆகிய பிரிவுகள் உள்ளன. மேலும் நமக்கு எத்தனை டெசிமல் இலக்கத்தில் விடை வேண்டும் என்பதனையும் செட் செய்து கொள்ளலாம்.

Area, pressure, temperature, velocity, time மற்றும் length ஆகிய பிரிவுகளுக்கான அலகுகளை மாற்றிக் கொள்ளவும் வசதி தரப்பட்டுள்ளது.

இந்த புரோகிராம் கைகளில் எழுதுவதனை ஏற்றுக் கொள்ளும் வகையில் அமைக்கப்பட்டுள்ளதால், ஒர்க்ஷீட் ஏரியாவில் நாம் நேரடியாகவே, ஈக்குவேஷன்களை எழுதி அமைக்கலாம்.

இந்த ஆட் ஆன் புரோகிராமினைப் பெறhttp://www.microsoft.com/downloads/en/details.aspx?FamilyID=9caca7225235401c8d3f9e242b794c3a என்ற முகவரியில் உள்ள தளத்திற்குச் சென்று, இலவசமாக டவுண்லோட் செய்து கொள்ளலாம்.

இதில் 32 மற்றும் 64 பிட்களுக்கென தனித்தனி புரோகிராம்கள் தரப்பட்டுள்ளன

Wednesday, March 23, 2011

Microsoft Visual Basic 6.0 தமிழில்


Microsoft Visual Basic 6.0 தமிழில்

Microsoft Visual Basic பற்றி சில பேர் அறிந்து இருந்தாலும்  பெரும் பாலானோர் அறிந்து இருக்க மாட்டார்கள் என்று நினைக்கின்றேன். இந்த மென்பொருளைப் பயன்படுத்தி நமக்கு விரும்பிய எந்தவொரு மென்பொருளையும் வடிவமைத்து கொள்ள முடியும். இதில் நீங்கள் மென்பொருள் உருவாக்க நினைத்தால் அதற்கு தேவையான code உங்களுக்கு ஏற்கனவே தெரிந்து இருக்க வேண்டும்.சரி இன்றைய முதல் பாடத்தை அடிப்படையில் இருந்து ஆரம்பித்தால் அது அவ்வளவு நல்ல இருக்காது.ஆகவே இதன் அடிப்படைகளைக் கொண்ட ஒரு புத்தகத்தை உங்களுக்கு அறிமுகம் செய்து வைக்கின்றேன்.
இந்த புத்தகம் இலங்கையில் தரம் 11 ( க.பொ.த.(சாதாரண தரம்) )மாணவர்களுக்கு விருப்ப பாடங்களில் ஒன்றாகிய தகவல் தொழில்நுட்பம் என்ற பாடத்தில் கற்பிக்கப்படுகிறது. இந்த புத்தகம் உங்களுக்கும்  பயன்தரும் என்று நினைத்து உங்களுடன் பகிர்ந்து கொள்கின்றேன்.

 புத்தகத்தை Download செய்ய.மீண்டும் சந்திப்போம்

Wednesday, March 16, 2011

உங்கள் கணினி பாஸ்வேர்ட் மறந்து போனால்!


விண்டோஸ் எக்ஸ்பி இயங்கு தளத்தில் பயனர் கணக்கை (user account) உருவாக்கி அதனை எவரும் அணுகா வண்ணம் பாஸ்வர்ட் மூலம் பாதுகாப்பளிக்கவும் முடியும் என்பது நீங்கள் அறிந்த விடயமே.
அப்படி நீங்கள் உருவாக்கும் பயனர் கணக்குக்குரிய பாஸ்வர்ட் ஒருவேளை மறந்து போனால் விண்டோஸில் டிபோல்டாக உருவாக்கப்படும் அட்மினிஸ்ட் ரேட்டர் (administrator) கணக்கு மூலம் லாக் ஓன் செய்து அதனை நீக்க முடியும். இந்த அட்மினிஸ்ட்ரேட்டர் கணக்குக்குப் பாஸ்வர்ட் இட்டுக் கொள்வோரும் உண்டு. இப்போது அந்த அட்மினிஸ்ட்ரேட்டர் கணக்குக் குரிய பாஸ்வர்டும் மற்ந்து போனால் என்ன செய்வது?

அதற்கும் ஒரு தீர்விருக்கிறது. எனினும் இந்த வழிமுறை ஓரளவு சிக்கலானது. விண்டோஸைப் புதிதாக நிறுவும் முறையை அறிந்திருப்போருக்கு இது இலகுவான விடயமே.

முதலில் கணினியை இயக்கி சிடியிலிருந்து பூட் ஆகுமாறு பயோஸ் (BIOS) செட்டப்பில் மாற்றி விடுங்கள். கணினியை மறுபடி இயக்கி விண்டோஸ் எக்ஸ்பீ சிடியை ட்ரைவிலிட Press any key to boot from CD எனும் செய்தி திரையில் தோன்றும். அப்போது ஒரு விசையை அழுத்த சிடியிலிருந்து கணினி பூட் ஆக ஆரம்பிக்கும். இது விண்டோஸை நிறுவும் செயற்பாட்டில் முதற்படியாகும்.

இந்த செயற்பாட்டில் கணினியைப் பரிசோதித்து பைல்கள் லோட் செய்யப்பட்டதும் Licensing Agreement திரை தோன்றும். அப்போது F8 விசையை அழுத்தியதும் வரும் திரையில் புதிதாக விண்டோஸை நிறுவுவதா அல்லது ஏற்கனவே நிறுவப்பட்டுள்ளதை சரி செய்வதா (Repair) என வினவும். அப்போது கீபோர்டில் R கீயை அழுத்தி ஏற்கனவே நிறுவப்பட்டுள்ள விண்டோஸை சரி செய்வதற்கான விருப்பை தெரிவு செய்யவும்.

அடுத்து கணினி மறுபடி இயங்க ஆரம்பித்து (restart) ஒரு சில நிமிடங்களில் திரையின் இடது புறத்தில் Installing Devices எனும் செயற்பாடு நடைபெறக் காணலாம். இந்த இடத்தில்தான் நீங்கள் செயற்பட வேண்டியுள்ளது. இங்கு கீபோர்டில் SHIFT + F10 விசைகளை ஒரே நேரத்தில் அழுத்துங்கள். அப்போது திரையில் கமாண்ட் விண்டோ தோன்றும். கமாண்ட் ப்ரொம்டில் NUSRMGR.CPL என டைப் செய்து எண்டர் கீயை அழுத்த கண்ட்ரோல் பேனலிலுள்ள User Accounts விண்டோ திறக்கக் காணலாம். இங்கு நீங்கள் விரும்பும் பயனர் கணக்குக்குரிய பாஸ்வர்டை மாற்றவோ நீக்கவோ முடியும்.,

ஒரு யூசர் கணக்கில் நுளையும்போது அதாவது லொக்-ஓன் செய்யும் போது பாஸ்வர்டை வினவாமல் செய்ய அதே கமாண்ட் ப்ரொம்டில் control userpasswords2 என டைப் செய்து எண்டர் கீயை அழுத்துங்கள். அங்கு அட்மினிஸ்ட்ரேட்டர் கணக்குக்குரிய பாஸ்வர்டை மாற்றவோ அல்லது நீக்கவோ (Reset password) ரீசெட் பாஸ்வர்ட் பட்டனில் க்ளிக் செய்து மாற்றிக் கொள்ளலாம்.

மாற்றங்கல் செய்த பின்னர் அந்த டயலொக் பொக்ஸை மூடிவிட்டு விண்டோஸ் ரிபெயாரிங் செயற்பாடு பூர்த்தியாகும் வரை அதனைத் தொடர வேண்டும்

Wednesday, March 2, 2011

உங்கள் ஜிமெயில் கணக்கை மற்றவர்கள் ஹாக் செய்யாமல் தடுக்க


எவ்வளவு தான் பாதுகாப்பாக நாம் ஜிமெயிலை உபயோகித்தாலும் வளர்ந்து வரும் தொழில் நுட்பத்தில் பாஸ்வேர்ட்களை அறிந்து நம்முடைய கணக்கை முடக்கிவிடுவதால் நம்முடைய ஜிமெயிலும் பறிபோகிறது மற்றும் பெரும்பாலும் நாம் உபயோகித்து கொண்டிருக்கும் கூகுள் தளங்களான பிளாக்கர்,யூடியுப்,ஆர்குட் போன்ற தளங்களில் நம் கணக்கை நாம் இழக்கும் அபாயமும் உள்ளது. ஆகவே நம்முடைய ஜிமெயில் கணக்கை எப்படி பாதுக்காப்பாக உபயோகிப்பது என்று கீழே பாருங்கள்.

 • முதலில் உங்கள் ஜிமெயிலை திறந்து அதில் Account Settings பகுதிக்கு செல்லுங்கள்.
 • அடுத்து வரும் விண்டோவில் Personal பகுதியில் உள்ள Using 2-step verification என்பதை க்ளிக் செய்யவும்.


 • அடுத்த விண்டோவில் மூன்று கட்டங்களாக இந்தசெயல் பாடு பிரிக்கபட்டிருக்கும்.

 • முக்கியமான ஒன்று இதை ஆக்டிவேட் செய்யும் போது உங்கள் பர்சனல் மொபைல் போனை நீங்கள் வைத்திருக்க வேண்டியது அவசியம்.
 • அந்த பக்கத்தில் உள்ள Set up 2-Step Verification என்ற பட்டனை அழுத்தவும்.

 • அந்த பட்டனை க்ளிக் செய்ததும் உங்களுக்கு அடுத்த கட்டம் ஓபன் ஆகும் அதில் உள்ள Select Phone என்பதை க்ளிக் செய்து உங்கள் Phone மாடலை தேர்வு செய்யுங்கள்.
 • அதில் குறிப்பிட்டுள்ள மூன்று வகை போனாகவும் இல்லை என்றால் கீழே உள்ள Other- Use another Phone  என்பதை தேர்வு செய்யுங்கள். பெரும்பாலனவர்கள் மற்ற மொபைல்களை உபயோகிப்பதால் இந்த வகை போன்களில் எப்படி ஆக்டிவேட் செய்வது என்பதை தொடர்கிறேன்.


 • மேலே உள்ள படத்தில் காட்டியுள்ளதை போல உங்கள் விவரங்களை தேர்வு செய்து கீழே உள்ள Send code என்ற பட்டனை அழுத்தவும்.
 • உடனே உங்கள் மொபைலுக்கு கூகுளில் இருந்து ஒரு SMS வரும். அந்த எண்ணை குறித்து கொண்டு இங்கு கீழே இருக்கும் Code என்ற இடத்தில் கொடுத்து அருகில் உள்ள Verify என்ற பட்டனை அழுத்தவும்.

 • அடுத்து உங்கள் மொபைல் verify செய்யப்பட்டது என்ற செய்தியுடன் கீழே உள்ள Next என்ற பட்டனை அழுத்தவும்.

 • ஒருவேளை இந்த போன் வேலை செய்யவில்லை அல்லது திருடப்பட்டுவிட்டது என்றால் என்ன பண்ணுவது அதற்க்கு Next என்ற பட்டனை க்ளிக் செய்யவும்.

 • அடுத்து வரும் பக்கத்தில் உங்களுக்கு 10 verification number இருக்கும் அதை பிரிண்ட் எடுத்து வைத்து கொள்ளுங்கள். ஒருவேளை உங்களுடைய போன் வேலை செய்யாமல் இருந்தால் இந்த நம்பர்களை வைத்து உங்கள் அக்கௌண்டில் உள் நுழையலாம். இந்த ஒவ்வொரு நம்பரிலும் ஒருமுறை மட்டுமே உள் நுழைய முடியும். 
 • அடுத்து அங்கு உள்ள சிறிய கட்டத்தில் (yes i have copied) டிக் குறியிட்டு கீழே உள்ள Next பட்டனை அழுத்தவும்.
 • அடுத்து வரும் விண்டோவில் உங்களின் வேறு ஒரு மொபைல் எண்ணை கொடுத்து Next க்ளிக் செய்யவும்.

 • அடுத்து வரும் பக்கத்தில் உள்ள NEXT பட்டன் க்ளிக் செய்யவும். அடுத்து வரும் பக்கத்தில் உள்ள Turn on 2-Step Verification என்பதை க்ளிக் செய்யவும்.

 • உங்களுக்கு ஒரு எச்சரிக்கை செய்தி வரும் அதில் OK என்பதை கொடுத்து விட்டால் உங்களுக்கு ஜிமெயில் லாகின் பக்கம் வரும் அதில் உங்களுடைய ID , PASSWORD கொடுத்தவுடன் உள்ளே செல்லாமல் இன்னொரு பக்கம் செல்லும் அதே நேரத்தில் உங்கள் மொபைலுக்கும் ஒரு SMS வரும்.
 • அதை குறித்து அந்த பக்கத்தில் சரியாக கொடுத்து கீழே உள்ள சிறிய கட்டத்தை டிக் செய்து VERIFY பட்டனை அழுத்திவிடவும்.  
 • இதே கணினியில் நீங்கள் 30 நாள் லாகின் செய்து கொள்ளலாம். வேறு புதிய கணினிகளில் லாகின் செய்ய முயன்றால் பாஸ்வேர்ட் மட்டும் கொடுத்தால் மட்டும் போதாது உங்கள் மொபைலுக்கு வரும் verification எண்ணையும் கொடுக்கவேண்டும்.
 • அப்பொழுது தான் லாகின் செய்ய முடியும். ஒருவேளை நீங்கள் லாகின் செய்ய முயலாமல் உங்களுக்கு இந்த verifiaction நம்பர் SMS வந்தால் யாரோ ஒருவர் உங்கள் கடவுச்சொல்லை அறிந்து உள்ளார் அவர் லாகின் செய்ய முயற்சி செய்கிறார் என அர்த்தம் உடனே உங்களின் பாஸ்வேர்டை மாற்றி விடுங்கள்.
 • இப்பொழுது உங்களின் ஜிமெயில் மிகவும் பாதுக்காப்பாக நீங்கள் உபயோகித்து கொள்ளலாம்.