Search This Blog

Showing posts with label Windows 7. Show all posts
Showing posts with label Windows 7. Show all posts

Monday, May 4, 2015

ஏ.சி.டி. பைபர் நெட் தரும் அதிவேக இணைய இணைப்பு


நொடிக்கு ஒன்று அல்லது இரண்டு மெகா பிட் வேகத்தில் இணைய இணைப்பு கிடைப்பதே அரிதான வேகம் என்று நாம் பழக்கப்பட்டுக் கொண்டிருக்கும் வேளையில், நொடிக்கு 20, 40 மற்றும் 60 மெகா பிட்ஸ் வேகத்தில், குறைந்த கட்டணத்தில் இணைய இணைப்பு தரும் பணியை, பெங்களூருவைச் சேர்ந்த அட்ரியா கன்வெர்ஜென்ஸ் டெக்னாலஜிஸ் (Atria Convergence Technologies (ACT))என்னும் நிறுவனம் மேற்கொண்டுள்ளது. 

ஏ.சி.டி. பைபர்நெட் என்ற பெயருடன் இயங்கும் இந்த நிறுவனம், முன்பு ஹைதராபாத்தில் இயங்கி வந்த அதிவேக பிராட்பேண்ட் இணைப்பு தந்து வந்த பீம் டெலி நிறுவனத்தை வாங்கியது நினைவிருக்கலாம். 

பீம் டெலி நிறுவனம், 2011 ஆம் ஆண்டில், மாதம் ஒன்றுக்கு ரூ. 2,500க்கு 20 மெகா பிட்ஸ் வேகத்தில் இணைய இணைப்பினைத் தந்து வந்தது. 

இதனை வாங்கி, தற்போது ஏ.சி.டி. பைபர்நெட் என்ற பெயரில் தன்னை விரிவாக்கிக் கொண்ட நிறுவனம், தற்போது ஆந்திர மாநிலம், தெலுங்கானா, கர்நாடகா மற்றும் தமிழ்நாட்டில் பல்வேறு இணைய இணைப்பு திட்டங்களைத் தருகிறது.

மாதம் ஒன்றுக்கு ரூ.1,999 கட்டணத்தில் அளவில்லா டேட்டா பயன்படுத்தும் வகையில், நொடிக்கு 60 மெகா பிட்ஸ் வேகத்தில் இணைய இணைப்பினைத் தருகிறது. ரூ.1,399க்கு, 40 மெகா பிட்ஸ் வேகமும், ரூ. 1,049க்கு, 20 மெகா பிட்ஸ் வேகத்திலும் இணைப்பினைத் தரும் திட்டங்களை அறிவித்துள்ளது. 

விரைவில் வர்த்தகச் செயல்பாட்டிற்கு 250 மெகா பிட்ஸ் வேகத்தில் இணைப்பு தரும் திட்டத்தினையும் மேற்கொள்ள இருக்கிறது. 
ஏ.சி.டி. நிறுவனம், இணைய இணைப்பிற்கு ஆப்டிகல் பைபர் கேபிளைப் பயன்படுத்துகிறது. இணைய இணைப்புடன் கேபிள் டி.வி. இணைப்பினையும் தருகிறது. 
தற்போது ஹைதராபாத் நகரில் 4 லட்சம் சந்தாதாரர்களையும், பெங்களூருவில் 1.5 லட்சம் பேர்களையும் இந்நிறுவனம் கொண்டுள்ளது. 

தங்கள் நிறுவனத்தின் விரிவாக்கப் பணிகளுக்கான கூடுதல் மூலதனத்தினை, பன்னாட்டளவில் இந்த நிறுவனம் பெற்றுள்ளது. ஒவ்வொரு நகருக்கும் ரூ.100 கோடி மூலதனச் செலவு செய்திட திட்டமிட்டுள்ளது. 

இந்திய அளவில் இந்த நிறுவனத்தின் செயல்பாடுகளை மக்கள் எதிர்பார்க்கின்றனர். ஏனென்றால், தற்போது இணைய சேவை வழங்கும் நிறுவனங்கள், கட்டணத்தை அதிக அளவில் வசூலித்து வரும் நிலையில், ஏ.சி.டி. நிறுவனம் வரும் நிலையில், போட்டியின் காரணமாக, கட்டணம் அதிக அளவில் குறைக்கப்படும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

ஆண்ட்ராய்ட் ஸ்மார்ட் போன் பயன்பாடுகள்



ஆண்ட்ராய்ட் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் இயங்கும் ஸ்மார்ட் போன்கள் விற்பனை இந்தியாவில், பெருமளவில் அதிகரித்து வருகிறது. 

பல நிறுவனங்கள் போட்டி போட்டு அனைத்து பிரிவினரும் வாங்கும் வகையில் இந்த வகை ஸ்மார்ட் போன்களைச் சந்தையில் அறிமுகப்படுத்தி வருகின்றனர். 

மேலும், தொடர்ந்த இணையத் தொடர்பு, இக்கால வாழ்க்கையில் அத்தியாவசியத் தேவையாக மாறிவருகிறது. இதற்கென அனைவரும் லேப் டாப் கம்ப்யூட்டரையும், இணைய இணைப்பு பெற டேட்டா கார்ட் என அழைக்கப்படும் இணைய சிறிய மோடங்களையும் எடுத்துக் கொண்டு அலைய முடியாது. 

இந்த தேவையை நிறைவு செய்திடவே, நமக்கு ஸ்மார்ட் மொபைல் போன்கள் அதிக அளவில் தொடர்ந்து வருகின்றன. அனைவரும் வாங்கும் வகையில், பட்ஜெட் விலையிலும் இவை கிடைப்பதால், அநேக மக்கள் இவற்றை வாங்கிப் பயன்படுத்தத் தொடங்கி உள்ளனர். பெரும்பாலான ஸ்மார்ட் போன்களில் ஆண்ட்ராய்ட் ஆப்பரேட்டிங் சிஸ்டமே பயன்படுத்தப்படுகிறது. 

அடிப்படை வசதிகள் மட்டுமே கிடைக்கும் போன்களில், கீ போர்டுடனும், அழைப்புக்கான பட்டன்களுடனும், முகவரிகளில் ஒருவகையான தேடும் வசதியுடனும் மட்டும் பழகி வந்த மக்கள், ஸ்மார்ட் போன்கள் தரும் நவீன வசதிகளை முழுமையாகத் தெரிந்து கொள்ளாமல், குறிப்பிட்ட சிலவற்றை மட்டுமே பயன்படுத்தி வருகின்றனர். 

இதனாலேயே இந்த போன் பயன்பாட்டின் பலவகை அம்சங்களின் இயக்கங்கள் குறித்து வாசகர்கள் பல கடிதங்களை அனுப்பி வருகின்றனர். இதற்குக் காரணம் ஆண்ட்ராய்ட் சிஸ்டம் தரும் வசதிகள் குறித்தும், அவற்றை அமைத்து இயக்கும் வழிகள் குறித்து பலர் முழுமையாக அறியாமல் இருப்பது தான். எனவே, ஏற்கனவே வெளியான சில தகவல் குறிப்புகள் இங்கு விரிவாகத் தரப்படுகின்றன.


நிறுவனங்கள் தரும் சில வேறுபாடுகள்: 

நீங்கள் வாங்கிப் பயன்படுத்தும் ஸ்மார்ட் போனை எந்த நிறுவனம் தயாரித்து வழங்கி உள்ளது என்ற அடிப்படையில் சில மேம்போக்கான வேறுபாடுகள் இருக்கலாம். 

இவை பெரும்பாலும், தொடக்க திரை தரும் மெனுக்களில் மட்டுமே இருக்கும். மற்ற இயக்க பயன்கள் பொதுவானதாகவே இருக்கும். எச்.டி.சி. மற்றும் சாம்சங் போன்களில் அனைத்துமே ஒரே மாதிரியாகத் தரப்பட்டிருக்கும். ஆனால், இந்த வேறுபாடுகள் குறித்து யாரும் கவலைப்பட்த் தேவை இல்லை.


அழைப்பில் வேறுபாடு: 

உங்களுடைய பழைய மாடல் போனில், அழைப்புகளை ஏற்படுத்தலாம், பெறலாம், டெக்ஸ்ட் மெசேஜ் அனுப்பலாம். படங்களை எடுக்கலாம், பார்க்கலாம். ஆனால், ஆண்ட்ராய்ட் சிஸ்டம் கொண்ட போனிலும் இவற்றை மிக நன்றாகவும், திறன் கூடியதாகவும் மேற்கொள்ளலாம். 

இருப்பினும் ஒரு வேறுபாடு உள்ளது. ஆண்ட்ராய்ட் ஸ்மார்ட் போன் இயக்கத்தின் அடிப்படை அவற்றின் அப்ளிகேஷன்களே. இவற்றை Apps என அழைக்கின்றனர். நாம் ஆண்ட்ராய்ட் போனில் மேற்கொள்ளும் அனைத்து செயல்பாடுகளும், இந்த ஆப்ஸ் என்ற அப்ளிகேஷன்கள் வழிதான் மேற்கொள்ளப்படுகின்றன. 

உங்கள் போன் திரையின் (Home Screen) கீழாக, போன் ஐகான் உள்ளதா? அதனைத் தொடுங்கள். உடனே அழைப்பு ஏற்படுத்துவதற்கான திரை கிடைக்கும். இதனுள்ளாக, அழைப்புகளை ஏற்படுத்தலாம், வாய்ஸ் மெயில் இயக்கலாம், நீங்கள் ஏற்படுத்திய, பெற்ற அழைப்புகளின் பட்டியலைக் காணலாம். முகவரிகள் பட்டியல் கிடைக்கும். உயர் வகை ஆண்ட்ராய்ட் போன் என்றால், இந்த முகவரிகளை குழுவாகப் பிரித்து அமைக்கலாம். பட்டியலில் உள்ள எண்களைக் கொண்டவர்களின் மின் அஞ்சல் முகவரிகளையும் பதிந்து வைக்கலாம்.


மெசேஜ் அனுப்பும் வசதி: 

உங்கள் போனைப் பொறுத்து இது Messages அல்லது Messaging என அழைக்கப்படும். நவீன போன்களில், Hangouts அப்ளிகேஷனிலும் டெக்ஸ்ட் மெசேஜ் கையாளலாம். மெசேஜிங் ஐகான அழுத்திக் கிடைக்கும் திரையில், ஒரு + ஐகான் கிடைக்கும். 

இதனை அழுத்தினால், புதிய மெசேஜ் ஒன்றை அமைக்கலாம். டெக்ஸ்ட் மெசேஜ் ஒன்றை அனுப்ப அதனைப் பெறுபவர் (recipient) குறித்த தகவல்கள் இருக்க வேண்டும்.

அதிரடி தொழில் நுட்ப வசதிகளுடன் விண்டோஸ் 10 மொபைல்




மொபைல் போனில் இயங்கும் ஆண்ட்ராய்ட் மற்றும் ஐ.ஓ.எஸ். ஆப்பரேட்டிங் சிஸ்டங்களுக்குச் சவால் விடும் வகையில் நவீன தொழில் நுட்பங்களில் இயங்கும் அதிரடி வசதிகளுடன் விண்டோஸ் 10 மொபைல் போன் சிஸ்டம் வர இருக்கிறது. 

இதற்கான முன்னோட்டத்தினை, மைக்ரோசாப்ட், அண்மையில் சீனாவில் நடைபெற்ற WinHEC (Windows Hardware Engineering Community) Shenzhen 2015 என்ற கருத்தரங்கில் காட்டியது. 

“Windows 10 Mobile” என்ற தலைப்பில் இந்த புதிய வசதிகள் குறித்து, மைக்ரோசாப்ட் அதிகார பூர்வ அறிவிப்பினை வெளியிட்டது. அவற்றை இங்கு காணலாம்.


4கே வீடியோ பதிவு (4K Video Recording): 

விண்டோஸ் 10 கேமரா அப்ளிகேஷன், 4கே வீடியோ பதிவிற்கான முழு சப்போர்ட்டுடன் கிடைக்கும். வீடியோ பதியப்படுகையிலேயே, ஸூம் செய்வதற்கான வசதி, ப்ளாஷ் இயக்கத்தினைத் தனியே கட்டுப்படுத்தும் வசதி, வீடியோ எச்.டி.ஆர். (High dynamic range) தொழில் நுட்பம் மற்றும் இது சார்ந்த தொழில் நுட்ப வசதிகள் ஆகியன தரப்படுகின்றன.


வை பி டைரக்ட் மற்றும் வை பி ஹாட் ஸ்பாட் 2: 

விண்டோஸ் 10 மொபைல் சிஸ்டத்தில் வை பி டைரக்ட் தரப்படுகிறது. இதன் மூலம் பயனாளர்கள், வை பி நெட்வொர்க்கில் இணையாமலேயே, தங்களுக்குள் வை பி இணைப்பினை ஏற்படுத்திக் கொள்ளலாம். வை பி ஹாட் ஸ்பாட் வசதியின் மூலம், பயனாளர்கள் ஒரு இணைப்பினை, பலர் பயன்படுத்திக் கொள்ள முடியும்.


புளுடூத் அம்சங்கள்: 

விண்டோஸ் 10 மொபைல் சிஸ்டத்தில், பலவகையான ஆடியோ மேம்பாட்டிற்கான அம்சங்கள், அதன் புளுடூத் டூலில் தரப்படுகின்றன. Wideband speech எனப்படும் தொழில் நுட்பத்தின் மூலம், எச்.டி. வாய்ஸ் தன்மை கிடைக்கும். A2DP மூலம், ஸ்டீரியோ ஆடியோ தன்மை வெளியாகும்.


எச்.சி.இ. சப்போர்ட் இணைந்த என்.எப்.சி.: 

தற்போது அண்மைக் களத் தகவல் தொடர்பு என அழைக்கப்படும் என்.எப்.சி. அனைத்து மொபைல் போன்களிலும் தரப்படுகிறது. விண்டோஸ் 10 மொபைல் சிஸ்டம் இதனை இன்னும் எளிமையாகவும் நவீனமாகவும் அமைக்கிறது. 

இதுவரை மொபைல் சேவை வழங்கும் சிம் கார்டில் உள்ள பாதுகாப்பு அம்சங்களைப் பயன்படுத்தியே, என்.எப்.சி. இணைப்பு செயல்பட்டு வருகிறது. ஆனால், எச்.சி.இ, (Host card emulation) எனப்படும் சாப்ட்வேர் கட்டமைப்பில், சாப்ட்வேர் மட்டுமே பயன்படுத்தி பலவகை கார்ட்களின் எலக்ட்ரானிக் அடையாளங்கள் அறியப்பட்டு செயல்படுத்தப்படுகின்றன.


ஸ்மார்ட் டயல்: 

இதுவரை மொபைல் போன்களில் பயன்படுத்தப்படாத ஒரு ஸ்மார்ட் டயல் வசதி, விண்டோஸ் 10ல் அறிமுகமாகிறது. இதில் “Yellow Books” என்று ஒரு வசதி உள்ளது. இதன் மூலம், பயனாளர்கள், மற்றவர்களின் தொடர்பு விபரங்களைத் தேடி அறியலாம்.


பேட்டரி பாதுகாப்பு: 

பேட்டரியின் திறன் செலவாவதைப் பயனாளரே கட்டுப் படுத்தும் வகையில், Battery Saver என்னும் டூல் தரப்பட்டுள்ளது. இது மேம்படுத்தப்பட்ட நிலையில் உள்ளது.


யு.எஸ்.பி. டூயல் ரோல் மற்றும் சி வகை இணைப்பு: 

விண்டோஸ் 10 மொபைல் சிஸ்டத்தில், பலவகையான யு.எஸ்.பி. வழி இணைப்பு சாதனங்களை இணைத்திட சப்போர்ட் தரப்பட்டுள்ளது. கீ போர்ட், மவுஸ் மற்றும் பெரிய அளவிலான ஸ்டோரேஜ் சாதனங்களை இணைக்கலாம்.


செயல்பாடு கண்காணிப்பு (activity tracking): 

மொபைல் போன் வைத்திருப்பவர் நடக்கிறாரா, ஓடுகிறரா அல்லது நீச்சல் அடிக்கிறாரா என்பதைக் கண்காணிக்க ஒரு டூல் தரப்படுகிறது. இதனை Activity Tracking Tool என அழைக்கலாம்.


புதிய சென்சார்கள்: 

ஏற்கனவே பயன்பாட்டில் உள்ள ஸ்மார்ட் போன்களில், பலவகையான சென்சார்கள் உள்ளன. இவை பல்வேறு சூழ்நிலைகளை உணர்ந்து அவற்றிற்கேற்ப செயல்படுகின்றன. 

பாரோமீட்டர், ப்ராக்ஸிமிடி சென்சார், அல்டிமீட்டர், பெடோ மீட்டர், பயோ மெட்ரிக் சென்சார், இதயத் துடிப்பு, கேஸ் லீக்கேஜ், சீதோஷ்ணநிலை அளந்து கூறும் சென்சார்கள் எனப் பல உள்ளன. விண்டோஸ் இயக்கத்தில் இன்னும் பல சென்சார்கள் தரப்படுகின்றன. 

காற்றில் உள்ள ஈரப்பதம், புற ஊதாக் கதிர்கள் ஆகியவற்றை அறியும் சென்சார்களை எடுத்துக் காட்டாகக் கூறலாம்.

நிச்சயமாக, விண்டோஸ் 10 மொபைல் ஆப்பரேட்டிங் சிஸ்டம், மொபைல் பயன்பாட்டில் ஒரு புதிய கட்டமைப்புடன் வர இருப்பதை மேலே கூறியவை காட்டுகின்றன. இன்னும் கூட நவீன தொழில் நுட்ப வசதிகள் சில, சிஸ்டம் வெளி வரும்போது கிடைக்கலாம்.

Thursday, August 2, 2012

உங்கள் குழந்தைகளை இணையம் தரும் தீமைகளிலிருந்து பாதுகாக்க...


இளம் மாணவர்களுக்கு அரசு லேப்டாப் கம்ப்யூட்டர்களை வழங்குகிறது. அரசு தரும் கம்ப்யூட்டரில் இணைய இணைப்பு வசதி இலவசமாக இல்லை என்றாலும், நிச்சயம் பெற்றோர்கள் அவற்றை வாங்கிக் கொடுப்பார்கள் என்பதில் சந்தேகம் இல்லை.

இன்றைய உலகில் கற்றுக் கொள்வதற்கும் அறிவுத் தேடலுக்கும் முதல் தேவை இணைய இணைப்பும், இணையத் தேடலும் தான்.

இதில் அபாயம் தரும் இன்னொரு பக்கமும் உள்ளது. முற்றிலும் கட்டற்ற இணையம் சிறுவர்களுக்கு அபாயகரமானது. பாலியல் தளங்களும், வன்முறையை போதிக்கும் தளங்களும் இணையத்தில் நிறைந்து கிடக்கின்றன.

இவற்றைப் பார்க்காதே என்று ஒரு காவலாளி போல சிறுவர்களை எந்நேரமும் கட்டுப்படுத்துவது இயலாது. மேலும் வரையறைகளை அமைப்பது இன்றைய டிஜிட்டல் உலகில் பெற்றோர்களுக்கும் சற்று சிரமமான செயல்பாடாக உள்ளது. இயலாததும் கூட. பெற்றோர் தடை இடுகையில் அதனை மீற வேண்டும் என்ற இயல்பு சிறுவர்களுக்கு இயல்பாகவே தோன்றுவது இயற்கையே.

இந்தச் சூழ்நிலையைச் சமாளிக்க நமக்கு K9 Web Protection என்னும் புரோகிராம் நமக்கு உதவுகிறது. இணையத்தில் இலவசமாகக் கிடைக்கும் இந்த புரோகிராம், வீடுகளில் பயன்படுத்தும் கம்ப்யூட்டர்களில், இணையத்தில் பெற்றோர் கட்டுப்படு விதிக்க உதவுகிறது. உங்கள் பெர்சனல் கம்ப்யூட்டரில் உள்ள இணையத்தை உங்கள் கட்டுப்பாட்டிலேயே, நீங்கள் அருகில் இல்லாத சூழ்நிலையிலும், வைத்திருக்க உதவுகிறது.

உங்கள் குழந்தைகளை இணையம் தரும் தீமைகளிலிருந்து பாதுகாக்க உதவிடும் இதன் சிறப்பம்சங்களாவன:

பாலியல், போதை மருந்து, தனிநபர் டேட்டிங், வன்முறையைப் போதிப்பது, வெறுப்பினை வளர்ப்பது, இனவேறு பாட்டினைத் தூண்டுவது என 70க்கும் மேற்பட்ட பல்வேறு பிரிவுகளாக, இணைய தளங்களைப் பிரித்து வைத்து தடுக்கலாம்.

குழந்தைகளின் வயதின் அடிப்படையில், தடுப்பு நிலைகளை அமைக்கலாம். அனைத்து தேடல் சாதனங்களிலும், SafeSearch என்ற ஒன்றை இயக்கி வைக்கலாம். குறிப்பிட்ட நேரத்தில் இணையத் தொடர்பினை ஏற்படுத்த இயலாமல் செட் செய்திடலாம்.

"எப்போதும் அனுமதி' மற்றும் "எப்போதும் தடை செய்திடு' என இருவகைகளாக இணைய தளங்களைப் பிரித்து அமைக்கலாம். பெற்றோர் அமைத்திடும் பாஸ்வேர்ட் மற்ற பாஸ்வேர்ட்களையும் மீறி இருக்கும் வகையில் அமைக்கலாம்.

கம்ப்யூட்டர் தொழில் நுட்பம் சற்று அதிகம் தெரிந்து பயன்படுத்துபவர்கள் கூட, மீட்டெடுக்க முடியாத தடைகளை உருவாக்கலாம். தடை செய்யப்பட்ட தளங்களைப் பார்த்தால், அது குறித்த அறிக்கை தரும்படி அமைத்திடலாம். விண்டோஸ் மட்டுமின்றி, மேக் கம்ப்யூட்டர்களில் இயங்கும் வகையிலும் இது தரப்படுகிறது.

K9 Web Protection என்ற இந்த புரோகிராம், மைக்ரோசாப்ட் விண்டோஸ் 7, விண்டோஸ் விஸ்டா, விண்டோஸ் எக்ஸ்பி, மேக் ஓ.எஸ். எக்ஸ் 10.4.7 மற்றும் அதற்கும் மேற்பட்ட சிஸ்டங்களில் இயங்குகிறது.

இதனை டவுண்லோட் செய்து இன்ஸ்டால் செய்திட முயற்சிக்கையில் லைசன்ஸ் கீ தரும்படி இந்த புரோகிராம் கேட்கும்.

லைசன்ஸ் கீயினை இலவசமாக,http://www1.k9webprotection.com/getk9webprotectionfree என்ற முகவரியில் உள்ள இணைய தளத்தில் பெற்றுக் கொண்டு பயன்படுத்தலாம்

Friday, September 16, 2011

இலவச ஆண்ட்டி வைரஸ் AVG 2012


தனிப்பட்ட நபர்கள் தங்கள் கம்ப்யூட்டர்களில் பயன்படுத்த, இன்றும் மிகச் சிறந்த ஆண்ட்டி வைரஸ் புரோகிராம்களில் ஒன்றாக, ஏ.வி.ஜி. ஆண்ட்டி வைரஸ் உள்ளது. இதன் புதிய தொகுப்பான ஏ.வி.ஜி. 2012 அண்மையில் வெளியிடப் பட்டுள்ளது.

கட்டணம் செலுத்தி வாங்கும் தொகுப்பில் உள்ள பெரும்பாலான வசதிகள், இலவச புரோகிராமில் இருப்பது இதன் சிறப்பாகும். ஆண்ட்டி வைரஸ், ஸ்பைவேர், ரூட்கிட்ஸ் மற்றும் ஸ்பேம் மெயில்களைத் தடுக்க என இந்த புரோகிராமில் தனித்தனி தொகுப்புகள் அடங்கியுள்ளன.

இதில் லிங்க் ஸ்கேனர் (Link Scanner) என்று ஒரு கூடுதல் வசதி ஒன்று தரப்பட்டுள்ளது. இது தேடல் முடிவு களையும், இணைய தளங்களுக்கான லிங்க்குகளையும் சோதனை செய்கிறது. இது இந்த புரோகிராமில் மட்டுமே காணப்படும் தனிச் சிறப்பு வசதியாகும்.

2008 ஆம் ஆண்டு ஏ.வி.ஜி. ஆண்ட்டி வைரஸ் புரோகிராமின் செயலாக்கம் மிகவும் மெதுவாக இருந்ததாகப் பலர் குற்றம் சாட்டினார்கள். ஆனால், 2009 மற்றும் அடுத்து வந்த மேம்படுத்தப்பட்ட பதிப்பு களில் பல குறைகள் களையப் பட்டதுடன், நவீன தொழில் நுட்பத்தில் இயங்கும் பல வசதிகள் தரப்பட்டன.

செயல்பாட்டினைப் பொறுத்தவரை, இன்று அவிரா மற்றும் அவாஸ்ட் ஆண்ட்டி வைரஸ் புரோகிராம் களுக்கு இணையாக இது கருதப்படுகிறது.

புதிய 2012 பதிப்பில், புரோகிராம் பைலின் அளவு 50% குறைக்கப் பட்டுள்ளது. இதனால் இணையத் திலிருந்து தரவிறக்கம் செய்வது வேகமாக நடை பெறுகிறது. இன்ஸ்டால் செய்வதும் வேகமாக மேற்கொள்ளப் படுகிறது.


ஹார்ட் டிஸ்க்கில் இந்த புரோகிராம் எடுத்துக் கொள்ளும் இடமும் குறைக்கப் பட்டுள்ளது. ப்ராசசர் இயங்கும் அளவு மற்றும் நினைவகத்தின் இடமும் 20% குறைவாக உள்ளது. 

இணையத்தில் உலாவுகையில் மட்டுமின்றி, ஆன்லைன் சேட் செய்திடும்போதும் வைரஸ், மால்வேர், வோர்ம்ஸ், ஆட்வேர் மற்றும் ஸ்பேம் ஆகியவற்றை எதிர்க்கிறது. எந்த நேரமும் இதற்கான உதவிகள் கிடைக்கின்றன. விண்டோஸ் எக்ஸ்பி உட்பட அனைத்து விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டங்களிலும் இயங்குகிறது. 

இதனை டவுண்லோட் செய்திட நீங்கள் செல்ல வேண்டிய இணைய தள முகவரி:http://avg.en.softonic.com/download

Tuesday, May 24, 2011

பர்சனல் போல்டர்களை பாதுகாக்க இலவச மென்பொருள்




நமது பர்சனல் அல்லது முக்கியமான போல்டர்களையும் , கோப்புகளையும் பிறர் தெரிந்தோ தெரியாமலோ அழித்து விடவோ அல்லது பார்த்து விடவோ வாய்ப்புண்டு. விண்டோஸில் Hide வசதியை பயன்படுத்தினாலும் அதையும் எளிதாக பார்த்து விடலாம்.

Password Folder என்னும் மென்பொருள் உங்கள் பர்சனல் போல்டர்களுக்கு Password வைத்து கொள்ளலாம். இதன் மூலம் உங்கள் பர்சனல் போல்டர்களை பிறரிடமிருந்து பாதுகாக்கலாம். இந்த மென்பொருள் எப்படி செயல் படுகிறது என பார்ப்போம்.

மென்பொருளை நிறுவிய பின் இயக்கினால் கீழே உள்ள விண்டோ தோன்றும்,இதன் மூலம் உங்கள் Password ஐ தேர்வு செய்து கொள்ளலாம்.



பின்னர் தோன்றும் விண்டோவில் நீங்கள் பாதுகாக்க வேண்டிய போல்டர்களையும் , கோப்புகளையும் தேர்வு செய்து கொள்ளுங்கள்.


கீழே உள்ள Lock & Exit என்ற பட்டனை கிளிக் செய்தால் நீங்கள் தேர்வு செய்த போல்டர்களும் , கோப்புகளும் நீங்கள் கொடுத்த Password மூலம் பாதுகாக்கபடும்.

போல்டர்களை மறைத்தல்(Hide),படிக்க முடியாமல் செய்தல்(Deny Read),எந்த மாற்றங்கள் செய்ய முடியாமல் தடுத்தல்(Deny Write) போன்ற மூன்று வழிகள் மூலம் உங்கள் போல்டர்களை பாதுகாக்கலாம்.



நீங்கள் பாதுகாக்கும் போல்டரை யாராவது பார்க்க நினைத்தால் கீழே உள்ளது போல் பிழைசெய்தி வரும். 



நீங்கள் மீண்டும் பாதுகாத்த போல்டரை பார்க்க நினைத்தால் மென்பொருளை திறந்து போல்டரை தேர்வு செய்து Unlock என்ற பட்டனை கிளிக் செய்தால் போதும்.

இந்த மென்பொருளை டவுன்லோட் செய்ய சுட்டி Password Folder

Wednesday, March 23, 2011

Microsoft Visual Basic 6.0 தமிழில்


Microsoft Visual Basic 6.0 தமிழில்

Microsoft Visual Basic பற்றி சில பேர் அறிந்து இருந்தாலும்  பெரும் பாலானோர் அறிந்து இருக்க மாட்டார்கள் என்று நினைக்கின்றேன். இந்த மென்பொருளைப் பயன்படுத்தி நமக்கு விரும்பிய எந்தவொரு மென்பொருளையும் வடிவமைத்து கொள்ள முடியும். இதில் நீங்கள் மென்பொருள் உருவாக்க நினைத்தால் அதற்கு தேவையான code உங்களுக்கு ஏற்கனவே தெரிந்து இருக்க வேண்டும்.சரி இன்றைய முதல் பாடத்தை அடிப்படையில் இருந்து ஆரம்பித்தால் அது அவ்வளவு நல்ல இருக்காது.ஆகவே இதன் அடிப்படைகளைக் கொண்ட ஒரு புத்தகத்தை உங்களுக்கு அறிமுகம் செய்து வைக்கின்றேன்.
இந்த புத்தகம் இலங்கையில் தரம் 11 ( க.பொ.த.(சாதாரண தரம்) )மாணவர்களுக்கு விருப்ப பாடங்களில் ஒன்றாகிய தகவல் தொழில்நுட்பம் என்ற பாடத்தில் கற்பிக்கப்படுகிறது. இந்த புத்தகம் உங்களுக்கும்  பயன்தரும் என்று நினைத்து உங்களுடன் பகிர்ந்து கொள்கின்றேன்.

 புத்தகத்தை Download செய்ய.மீண்டும் சந்திப்போம்

Monday, January 24, 2011

தடை செய்யப்பட்ட இணையதளங்களில் உங்கள் கைவரிசையை காட்ட


நாம் அதிகம் இணையதளம் பாவிக்கும் இடங்களான அலுவலகம், பாடசாலை, பல்கலைக்கழகம் என்பவற்றில் பல எமக்கு பிடித்த இணையதளங்கள் குறிப்பாக Facebook .com, blogspot .com என்பன Network Administrator ஆல் தடை செய்யப் பட்டிருக்கும். இந்த கட்டுப்பாடுகளை உடைத்து எப்படி உங்களுக்கு பிடித்த தடைசெய்யப்பட்ட தளங்களுக்கு செலவது என்பதற்கான 7 முறைகள். இவற்றில் சில சமயம் குறிப்பிட்ட ஒரு முறை பயனளிக்காத பட்சத்தில் மற்றைய முறையை கையாளலாம்.

குறிப்பு  :- இந்த முறைகளை தடை செய்யப்பட்ட சட்டவிரோத இணைய தளங்களுக்கு செல்வதற்கு பயன்படுத்தல் கூடாது.

1 .URL இக்கு பதிலாக IP address ஐ பயன்படுத்தல்

ஒவ்வொரு இணையதளமும் தனது URL அதாவது Domain name இற்கு சமமான IP address ஐ கொண்டிருக்கும். உதாரணமாக facebook http://www.facebook.com என்ற URL இற்கு சமமாக 69.63.189.11 என்ற IP address ஐ கொண்டுள்ளது.இது போல் உங்களுக்கு தேவையான மற்ற இணைய தளங்களின் IP address ஐ கண்டு பிடிக்க http://www.ip-adress.com/reverse_ip என்ற தளம் பயனுள்ளதாக இருக்கும்.


2 .Google Cache ஐ பயன்படுத்தல்

நீங்கள் Google போன்ற search engines களை பயன்படுத்தி குறித்த இணையதளத்தை தேடும் பொது தேடல் முடிவுகள் கிடைக்கும்.அந்த குறிப்பிட உங்களுக்கு தேவையான search result இன் கீழ் பார்த்தீர்கள் என்றால் "Cache " என்ற ஒரு சொல் (லிங்க்) இருக்கும் அதனை நீங்கள் அழுத்தும் பொது உங்களுக்கு தேவையான குறித்த தடை செய்யப்பட்ட இணைய தளத்துக்கு செல்ல முடியும்.


3 .e -mail இல் பெறுதல்

web2mail என்ற ஒரு இலவச சேவை வழங்கும் தளம் ஒன்று உள்ளது. நீங்கள் இந்த தளத்தின் மின்னஞ்சல் முகவரியான www@web2mail.com இக்கு ஒரு மின்னஞ்சல் அனுப்ப வேண்டும் subject title ஆக உங்களுக்கு தேவையான தளத்தின் URLஐ இட்டு.இது நீங்கள் அனுப்பிய தள முகவரியின் web page இனை உங்கள் மினஞ்சல் Inbox இற் கு அனுப்பி வைக்கும்.


4 .Proxy Websites இனை பயன்படுத்தல்

இது தான் பலரால் பயன்படுத்தப்படும் பிரபல முறை.இப்படியான தளங்கள் ஆயிரக்கணக்கில் உள்ளன.இத்தளங்களுக்கு சென்று தடை செய்யப்பட்ட உங்களுக்கு வேண்டிய இணையதள முகவரியை கொடுத்தால் குறித்த தளத்துக்கு செல்ல கூடியதாக இருக்கும். மிக பிரபலமான இப்படியான சேவை வழங்கும் ஒரு தளம்http://www.hidemyass.com ஆகும்.


5 .Short URL முறையை கையாளல்

பெரிய URL களை சுருக்கி தரும் சேவையை வழங்கும் சில தளங்கள் உள்ளன. இப்படியான ஒரு தளத்துக்கு சென்று உங்களுக்கு தேவையான முகவரியை வழங்கி சுருக்கப்பட்ட முகவரியை பெற்று அதற்கு செல்வதன் மூலம் தடை செய்யப்பட்ட தளத்துக்கு செல்ல முடியும்.இப்படியான URL சுருக்கல் சேவை வழங்கும் பிரபல தளம்http://bit.ly இனை நீங்கள் பாவிக்கலாம்.


6 .Screen-Resolution.com

இந்த தளம் different resolution இல் உள்ள எந்த தளத்தையும் பார்வையிட உதவு கின்றது. அதுமட்டுமல்லாமல் மிகவும் சுவாரசியமான பயனுள்ள ஒரு தளம். இங்கு சென்றால் தடை செய்யப்பட்ட இணையதளங்களுக்கு நீங்கள் செல்ல உதவும்.


7 .Google Mobile Search

http://www.google.com/gwt/n என்ற இந்த தளம் குறித்த ஒரு இணைய தளத்தை செல் போன்  இல் பார்த்தால் எப்படி இருக்கும் என பார்க்க உதவும் ஒரு தளமாகும். இத்தளத்துக்கு சென்றும் நீங்கள் தடை செய்யப்பட்ட இணையதளங்களுக்கு நீங்கள் போகலாம்.

Thursday, January 13, 2011

வைரஸ் தாக்கிய பைலை மீளப்பெறுவது எப்படி?

எச்சரிக்கை!இதை நீங்கள் செய்ய வேண்டும் என்றால் உங்களுடைய கணினியில் ஒரு நல்ல Antivirus மென்பொருள் நிறுவி இருந்து அதை Update செய்து இருக்க வேண்டும்.


நீங்கள் pen Drive உபயோகிப்பவராக இருந்தால் நிச்சயம் இந்த பிரச்சினைக்கு முகம் கொடுத்து இருப்பீர்கள்.சரி வைரஸ் தாக்கிய பைலை எப்படி மீளப்பெறுவது என்று பார்ப்போம்.


இதற்கு கீழ்வரும் விசயங்களை கவணிக்கவும்

01.pen Drive இல் இருந்த பைல் ஐ Antivirus  அழித்த பிறகு காணவில்லை

02.pen Drive இன் used space கூடதலாக காட்டுகிறது ஆனால் அதற்குறிய பைல் pen drive இல் இல்லை

03.நீங்கள் மீளப்பெற நினைக்கும் பைல் இப்படியாக இருக்க வேண்டும்.(.DAT,.FLV,.MP4,.VOB,.MP3,.ZIP,.RAR,.PDF,.HTML,.RTF,.DOC,.JPG,.PNG,.TXT.....)

04.நீங்கள் மீளப்பெற நினைக்கும் பைல் .exe இல் இருந்தால் மீளப்பெற முடியாது.

இவ்வளவு விசயங்களும் உங்களுக்கு பொருந்தும் எனின் நிச்சயமாக மீளப்பெற முடியும்.

இதை நிச்சயமாக மீளப்பெற முடியும் என்பதற்குரிய காரணம் என்ன வென்றால் உங்களுடைய pen drive இல் ஒரு போல்டருக்குல் வைரஸ் இருந்தால் Antivirus software அந்த Virus ஐ அழித்து விட்டு அந்த Folder ஐ system Hidden செய்து விடும்.ஆனால் அந்த போல்டர் உங்களுடைய pen drive இல் தான் இருக்கிறது.system Hidden Folder ஐ எப்படி தெரிய வைப்பது என்று பார்ப்போம்.

start > control panel > folder Options > view
( Folder Option ஐ காணவில்லையாயின் இங்கு)

Show hidden files and folder என்பதை தெரிவு செய்து கொண்டு Hide protected operating system files [Recommended] என்பதை கிளிக் செய்யுங்கள்.ஒரு செய்தி வரும் அதற்கு yes என்பதை கொடுத்து விட்டு OK செய்து கொள்ளுங்கள்.

இப்போது உங்களுடைய pen Drive இற்குல் செல்லுங்கள் அந்த பைல் இருப்பதை காணலாம் ( சில நேரம் வைரஸ் எச்சரிக்கையும் வரும்)

Monday, October 25, 2010

பயன் உள்ள சாப்ட்வேர்களின் பற்றிய தொகுப்பு

வணக்கம் இன்றைய நாள் இனிய நாளாக அமைய எனது வாழ்த்துகள்......



தற்போது நாம் காண இருக்கும் மென்பொருள் Recuva.





நீங்கள் சில சமயம் எண்ணியிருகலாம்...தாங்கள் கணினியில் தாங்கள் வேண்டாமென்று அழித்த பைல்களை மீண்டும் பெற்றால் நன்றாக இருக்குமே அல்லது தெரியாமல் அழித்த பைல்களை மீண்டும் பெற்றால் நன்றாக இருக்குமே என்று......

ஒரு வேலை தாங்கள் அழித்த பைல் Recycle Binயில் இருந்தால் நாம் Restore தந்து விடலாம், ஆனால் Recycle Binயில் இல்லையென்றால்.....என்ன செய்வது....!

கவலை வேண்டால் அதற்கு தான் Recuva என்னும் மென்பொருள் உள்ளது.

தாங்கள் கணினியில் நிரந்தரமாக அழித்த அல்லது பென்டிரைவ், மெமரி கார்டு...போன்றவற்றில் அழித்த பைல்களை மீண்டும் பெற Recuva என்னும் மென்பொருள் உதவுகிறது.


இதை உபயோகிக்கும் முறை:

முதலில் இயக்கும் போது தாங்கள் செய்வது...

1. தாங்கள் File Type Optionனை தெர்வு செய்ய வேண்டும்...இதில் தாங்கள் தேடயிருபது Pictures or Music or Documents or Video or Other என்பதை தெர்வு செய்ய வேண்டும்.....பின்னர் Next என்பதை Click செய்க...


2. அடுத்தது தாங்கள் File Locationனை தெர்வு செய்ய வேண்டும்...இதில் Removable Drivers(Pendrive,Memory card etc..) or My documents or Recycle Bin or Other location எதையாவது ஒன்றை தாங்கள் தேர்வு செய்ய வேண்டும்...பின்னர் Next என்பதை தெர்வு செய்ய வேண்டும்..









3. பின்னர் Start என்பதை Click செய்யவும்....சிறிது நேரம் தாங்கள் கணினியை Recuva Scan செய்யும். பின்னர் தாங்கள் அழித்த பைல்களை மீண்டும் பெறலாம்....








Download This Software PLz Click HereRecuva Free Download

Monday, October 18, 2010

நமக்கு இமெயில் அனுப்பியவரின் விவரங்கள் அறிய

இணையத்தில் பல நிறுவனங்கள் இலவச ஈமெயில் சேவையை தருவதனால் பல பேர் அந்த சேவையை பயன்படுத்தி நம் நண்பர்களுக்கோ அல்லது உறவினர்களுக்கோ இமெயில் அனுப்புகிறோம். இது மட்டுமில்லாமல் நமக்கு தெரியாதவர்கள் மற்றும் சில மோசடி கும்பல்களிடம் இருந்து கூட இமெயில்கள் வந்து கொண்டு இருக்கிறது. இப்படி அனுப்பப்படும் ஈமெயில்கள் எங்கிருந்து யாரால் அனுப்பபடுகிறது என இங்கு அறிந்து கொள்வோம்.
நமக்கு ஈமெயில் அனுப்பியவரின் விவரம்:
  • இதற்க்கு நமக்கு Spokeo என்ற தளம் நமக்கு உதவி புரிகிறது. இந்த தளம் செல்ல இந்த லிங்கில் http://www.spokeo.com செல்லவும்.

  • இந்த தளம் சென்றவுடன் உங்களுக்கு மேலே இருப்பதை போல விண்டோ வரும்.
  • அதில் உங்களுக்கு தெரியும் காலி இடத்தில் நீங்கள் தகவல் பெற விரும்பும் இமெயில் ஐடியை கொடுத்து அருகே உள்ள SEARCH என்ற அழுத்தவும்.
  •  உங்களுக்கு உங்கள் மெயில் ஐடி ஸ்கேன் ஆகி தகவல்கள் தெரியும். 
  • ஒருமுறை நீங்கள் உங்கள் மெயில் ஐடியை கொடுத்து உபயோகித்து பாருங்கள். உங்களுக்கே வியப்பாக இருக்கும். 
FRIENDS:

  • இந்த தளத்தில் இன்னொரு சிறப்பான வசதி நம் மெயில் இந்த friends என்ற வசதி. இந்த வசதியின் மூலம் நம் மெயிலில் உள்ள நண்பர்களின் விவரங்களை அறிந்து கொள்ளமுடியும்.

  • நண்பரே இதில் நீங்கள் உங்கள் பிளாக்கர் மெயில் ஐடியை உபயோகிக்க வேண்டாம். இந்த தளம் பாதுகாப்பு வாய்ந்தது என்று தெரியவில்லை. கவனமாக இருப்பதே நல்லது. 

இந்த தளத்தில் மேலும் சில வசதிகள் இருந்தாலும் (NAME FINDER, PHONE FINDER) இவைகள் சரியாக இயங்கவில்லை. ஆகையால் அவைகளை பற்றி இங்கு விளக்கவில்லை.

பழைய விண்டோஸ் XP கணினியிலிருந்து புதிய விண்டோஸ் 7 க்கு Easy Transfer

நம்மில் பலர்,  பல வருடங்களாக விண்டோஸ் XP பயன்படுத்தி வந்திருக்கிறோம். சில வருடங்களுக்கு முன்பாக விண்டோஸ் விஸ்டா சந்தைக்கு வந்தபொழுது, பலரும் மாற்றத்தை விரும்பாமல், விண்டோஸ் XP யே வசதியாக உள்ளது என்று விஸ்டாவை ஒதுக்கி விட்டோம். சமீப காலமாக விண்டோஸ் 7 பலரையும் கவர்ந்துள்ளதாலும், புதியதாக வாங்கும் மடிக்கணினிகள் பலவும் விண்டோஸ் 7 நிறுவப்பட்டு விற்பனைக்கு வருவதாலும் விண்டோஸ் 7 இயங்குதளத்திற்கு மாறியாக வேண்டியுள்ளது. 

இச்சமயத்தில், நமது பழைய விண்டோஸ் XP கணினியில் உள்ள நமது Profile, கோப்புகள், செட்டிங்ஸ் ஆகியவற்றை புதிய விண்டோஸ் 7 இயங்குதளம் உள்ள கணினி அல்லது மடிக்கணினிக்கு External Drive அல்லது USB Flash Drive கொண்டு, எப்படி Migrate செய்வது என்பதை பார்க்கலாம்.

முதலில் விண்டோஸ் 7 நிறுவப்பட்டுள்ள கணினியில் Start சென்று Getting Started க்ளிக் செய்து Transfer your Files ஐ க்ளிக் செய்யுங்கள்.


அடுத்து திறக்கும் Windows Easy Transfer திரையில் An external hard disk or USB flash drive பொத்தானை அழுத்தி, அடுத்த திரையில்  This is my new Computer பொத்தானை சொடுக்குங்கள்.

அடுத்து திறக்கும் திரையில், "Has Windows Easy Transfer already saved your files from your old computer to an External Hard disk or USB Flash Drive?" என்ற கேள்விக்கு No பொத்தானை சொடுக்குங்கள். அடுத்த திரையில் "Do you need to install Windows Easy Transfer on your Old Computer?" எனும் கேள்விக்கு, “I need to install it now” ஐ க்ளிக் செய்யுங்கள்.


இந்த சமயத்தில் உங்கள் External Hard Disk ஐ கணினியில் பொருத்தி விடுங்கள். அடுத்த திரையில், நீங்கள் உபயோகிப்பது External Hard disk ஆக இருந்தால், “External hard disk or shared network folder” எனவும், USB Flash Drive ஆக இருந்தால், "USB Flash Drive" என்வும் தேர்வு செய்து கொள்ளுங்கள்.

இப்படியாக Windows Easy Transfer ஐ உங்கள் External Hard disk -இல் காப்பி செய்த பிறகு, உங்கள் பழைய கணினியில் பதிய சொல்லி செய்தி வரும். 

இனி external hard drive ஐ உங்கள் பழைய விண்டோஸ் XP கணினியில் பொறுத்தி, external hard drive லிருந்து Windows Easy Transfer ஐ இயக்குங்கள்.


Next பொத்தானை சொடுக்கி,  அடுத்த திரையில், “An external hard disk or USB flash drive” என்பதை க்ளிக் செய்யுங்கள்.


அடுத்த திரையில், உங்களுக்கு தேவையான, கோப்புகள், செட்டிங்ஸ், அவுட்லுக் மின்னஞ்சல்கள், பேவரட்ஸ் ஆகியவற்றை தேர்வு செய்து பின்னர், Next கொடுங்கள். (Advanced லிங்கை க்ளிக் செய்து, தேவையற்ற Temp கோப்புகளை நீக்கி, தேவையான கோப்புகளை மட்டும் தேர்வு செய்து கொள்ளலாம். இதில் ஏற்கனவே XP கணினியில் நிறுவப்பட்டுள்ள மென்பொருட்களை காப்பி செய்ய கூடாது)
அடுத்ததாக இந்த பேக்கப்பிற்கு கடவு சொல் ஏதேனும் கொடுக்க விருப்பமிருந்தால் கொடுத்து, Save பொத்தானை சொடுக்குங்கள். இவையனைத்தும் சரியாக பேக்கப் ஆன பிறகு, உறுதி செய்தியும் வந்த பிறகு, இந்த External Hard Disk அல்லது USB Flash Drive ஐ உங்கள் புதிய விண்டோஸ் 7 கணினியில் பொருத்தி Windows Easy Transfer ஐ திறந்து, முதல் திரையில் “Yes" பொத்தானை சொடுக்குங்கள்.






External Drive இல் பேக்கப் கோப்பு எங்கு சேமிக்கப்பட்டுள்ளது, என்பதை தேர்வு செய்து கொடுங்கள். 




இப்பொழுது நீங்கள், பேக்கப் எடுத்த அனைத்து கோப்புகளையுமோ, அல்லது தேவையான குறிப்பிட்ட கோப்புகள் மற்றும் செட்டிங்ஸ் களையோ தேர்வு செய்து ட்ரான்ஸ்பர் செய்து கொள்ளலாம்.


அவ்வளவுதான், உங்கள் எக்ஸ்பி கணினியிலிருந்து, விண்டோஸ் 7 கணினிக்கு, உங்கள் கோப்புகள் மற்றும் செட்டிங்ஸ் அனைத்தும் ட்ரான்பர் ஆகி விட்டது.


இதே போல நெட்வொர்க் உள்ள எக்ஸ்பி மற்றும் விண்டோஸ் 7 கணினிகளில், தனியாக ட்ரைவ் ஏதுமின்றி, ட்ரான்ஸ்பர் செய்ய இயலும்.

விண்டோஸ் பழுதுபார்ப்பு!

விண்டோஸ் எக்ஸ்பி இயங்குதளம் உபயோகிப்பவர்கள் அவ்வப்போது, தங்களது கணினி பூட் ஆகும் பொழுது, விண்டோஸ் லோடு ஆகும் திரை வந்த பிறகு, உடனடியாக ரீஸ்டார்ட்  ஆகும் பிரச்சனையை சந்தித்து இருக்கலாம். 


இப்படி முதல் முறை ரீஸ்டார்ட்  ஆகி மறுபடி பூட் ஆகும் பொழுது Safe mode ஆப்ஷனோடு திரை வந்திருக்கும். 
இதில் Safe mode இல் சென்றாலும், Last known Good Configuration -இல் சென்றாலும், இதே போன்று தொடர்ந்து ரீஸ்டார்ட் ஆகிக் கொண்டிருக்கும், உள்ளே இருக்கும் உங்களது முக்கியமான டேட்டாக்கள் ஏதாவது ஆகிவிடுமோ என்ற பயம் வருவது இயற்கை. 

சரி, விண்டோஸ் சீடியை வைத்து பூட் செய்து இந்த இயங்குதளத்தின் மேலேயே over write செய்து விடலாம் என்று முயலும் போது, அங்கேயும் ஆப்பு காத்திருக்கும்.  விண்டோஸ் சீடியில் பூட் செய்து முதலாவது Repair ஆப்ஷனை தவிர்த்து  Agreement பக்கத்திற்கு அடுத்து வரும் திரையில் கீழே உள்ளது போல உங்கள் விண்டோஸ் பார்ட்டிஷன் காண்பிக்கப்பட்டால் 'R' கீயை அழுத்தி ரிப்பேர் செய்து கொள்ளலாம். 


 ஆனால், விண்டோஸ் ரிப்பேர் வசதியில் செல்லும் போது உங்கள் விண்டோஸ் பார்ட்டிஷனை Unknown partition என்றோ அல்லது விண்டோஸ் ஏற்கனவே நிறுவப்படாத மற்ற பார்ட்டிஷன்களை போலவே உங்கள் விண்டோஸ் பார்ட்டிஷனும் பட்டியலிடப்பட்டிருக்கும். இது போன்ற நிலை வரும்பொழுது சற்று சிக்கல்தான். 

முதலாவதாக நாம் நினைவில் கொள்ள வேண்டியது. இந்த நிலைக்கு முந்தைய வரலாறு (வரலாறு மிக முக்கியம் அமைச்சரே!..) அதாவது இந்த ரீஸ்டார்ட் பிரச்சனை வருவதற்கு முன்பாக என்ன நிகழ்ந்தது? முழுவதுமாக ஷட் டவுன் ஆவதற்கு முன்பாக பவரை அனைத்து விட்டீர்களா? அல்லது கரண்டு போய்விட்டதா? யாராவது Reset பட்டனை அழுத்திவிட்டு போய் விட்டார்களா? அல்லது இதில் ஏதுமில்லையா? 

இந்த கேள்வியெல்லாம் எதற்கு? என்றால், இது போன்ற ரீ ஸ்டார்ட் பிரச்சனை பெரும்பாலும் பூட் பார்ட்டிஷனில் கோப்புகள் கிராஸ் லிங்க் ஆகிவிடவதால் ஏற்படுபவை, அல்லது (மிக அரிதாக) உங்கள் வன்தட்டிற்கு வயதாகி கொண்டிருக்கிறது அல்லது (மிகமிக அரிதாக) பிராசசர் ஃபேனில் தூசி அதிகம் படிந்து, ஃ பேனின் வேகம் குறைந்தது  என்றும் கொள்ளலாம். கிராஸ் லிங்க் ஆவதற்கு முக்கிய காரணம் முறையாக ஷட் டவுன் செய்யாமலிருப்பது.

இந்த பிரச்சனை வரும் பொழுது எடுத்தவுடனே விண்டோஸ் Over write செய்து விடலாம் அல்லது புதிதாக வேறு ட்ரைவில் நிறுவிவிடலாம் என்ற முடிவிற்கு வருவதற்கு முன்பாக, விண்டோசின் தாத்தா DOS கருவியான Chkdsk ஐ பயன்படுத்தி இந்த பிரச்னைக்கு விரைவாகவும், எளிதாகவும் தீர்வு காண்பது எப்படி என்று பார்க்கலாம். 

விண்டோஸ் பூட் சீடியை வைத்து உங்கள் கணினியை பூட் செய்து கொள்ளுங்கள். பிறகு முதலாவதாக வரும் Repair திரையில் 'R' கீயை அழுத்தி Recovery Console திரைக்கு வந்து விடுங்கள். 

     
இந்த பிரச்சனை உள்ள கணினிகளில், விண்டோஸ் பார்ட்டிஷன் உள்ள ட்ரைவை குறிப்பிடும்படி கேட்காது. தேர்வு செய்ய சொல்லி வந்தால் தேர்வு செய்து கொள்ளுங்கள். அடுத்து, C:\> ப்ரோம்ப்டில் CHKDSK /R கட்டளை கொடுக்கலாம். ஒரு சில சமயங்களில் இந்த கட்டளை இயங்காமல் போனால், CD/DVD   ட்ரைவிற்கு   சென்று (உதாரணமாக g:) அங்கு CD\i386 கட்டளை கொடுத்து அந்த டைரக்டரிக்கு சென்று அங்கு CHKDSK கட்டளையை கொடுங்கள். 


இது முடிந்த உடன் Exit கொடுத்து கணினியை ரீ ஸ்டார்ட் செய்து விட்டால் போதுமானது. கிராஸ் லிங்க ஆன சிஸ்டம் கோப்புகள் அனைத்தும் சரி செய்யப்பட்டு, கணினி முன்பு போல இயங்கும்.  பெரும்பாலான கணினிகளில் இந்த வழியை பயன்படுத்தி விண்டோஸ் எக்ஸ்பி ரீ ஸ்டார்ட் பிரச்சனையை சரி செய்யப் பட்டுள்ளது.

Tuesday, August 17, 2010

DISABLE / ENABLE PEN-DRIVES FOR UR OFFICE

கணினியில் USB Drive களை முடக்குவது எப்படி?

கணினியில் USB Drive களை முடக்க வேண்டிய நிர்பந்தம் எப்போது ஏற்படும் என்பதனை பார்ப்போம். கணினியில் வைரஸ் நுழைவதற்கான நுழைவாயில் பெரும்பாலும் USB Drive கள் தான். ஒன்றிற்கு மேற்பட்டோர் கணினியை உபயோகிக்கும் போது அனைவரும் USB Drive களை பயன்படுத்துவது தவிர்க்க இயலாதது.இல்லத்திலோ, அலுவலகங்களிலோ , ப்ரொவ்சிங் சென்டெர் போன்ற இடங்களிலோ கணினி பற்றி அதிகம் அறியாதோர் தவறுதலாக வைரஸ் உள்ள USB Device மூலம் கணினிக்குள் வைரஸ் புகுத்தி விட வாய்ப்பு உண்டு.

நம்முடைய கணினியில் உள்ள விவரங்களை நாம் கணினியில் இல்லாத நேரம் பிறர் சில நிமிடங்களில் USB காப்பி செய்து எடுத்து விடும் அபாயமும் உண்டு. இது போன்ற தருணங்களில் கணினியில் உள்ள USB Drive களை முடக்கி (Disable) செய்து வைக்க வேண்டிய கட்டாயம் வரும்.

கணினியின் BIOS Settings சென்று USB Port Disable செய்யலாம். ஆனால் அது நாம் USB Mouse, USB Keyboard, USB Printer போன்றவற்றை உபயோகித்தால் அவற்றையும் முடக்கி விடும்.USB Storage Device களை மட்டும் முடக்க வேண்டும். இதனை மூன்று வழிமுறைகளில் செய்யலாம்.

Start பட்டனை கிளிக் செய்து Run கிளிக் செய்யுங்கள். அதில் regedit என்று கொடுத்து எனத் தட்டுங்கள். Start --> Run --> regedit . ரெஜிஸ்டரி எடிட்டர் தோன்றும். அதில் HKEY_LOCAL_MACHINE --> SYSTEM --> CurrentControlSet --> Services --> UsbStor செல்லுங்கள். வலது புறம் வரும் ஆப்சன்களில் "Start" என்பதனை டபுள் கிளிக் செய்யுங்கள்.

தோன்றும் விண்டோவில் "Value Data" என்பதில்
நீங்கள் USB Storage Drive களை Disable செய்ய விரும்பினால் "4" என்று கொடுக்கவும். USB Storage Drive களை Enable செய்ய விரும்பினால் "3" என்று கொடுக்கவும். 

ரெஜிஸ்டரி
 எடிட்டரை மூடி விட்டு கணினியை Reboot செய்யவும். உங்கள் தேர்வின்படி USB Storage Drive enable/disable ஆகும்.

இந்த முறை உங்களுக்கு கடினமானதாக தோன்றினால் ஒரு எளிய முறையை பார்ப்போம். கீழ்காணும் இரண்டு கோப்புகளையும் தரவிறக்கி கொள்ளுங்கள்.

USB Storage Drive களை Enable செய்ய - EnableUSBDrive.reg
USB Storage Drive களை Disable செய்ய - DisableUSBDrive.reg

உங்கள் தேவைக்கான கோப்பை ஓபன் செய்தால் USB Enable / Disable ஆகும்.


மற்றுமொரு வழிமுறையும் உண்டு. ஒரு இலவச மென்பொருள் மூலம் இதனை செய்யலாம். இந்த மென்பொருளை இங்கே கிளிக் செய்து பெற்று உங்கள் கணினியில் நிறுவி கொள்ளுங்கள்.


வேண்டுமென்ற ஆப்சனை தேர்வு செய்து உங்கள் தேவையை நிறைவேற்றி கொள்ளுங்கள். மேற்சொன்ன முறைகள் விண்டோஸ் எக்ஸ்பி, விண்டோஸ் 2000, விண்டோஸ் 2003, விண்டோஸ் விஸ்டா , விண்டோஸ் 28, விண்டோஸ் 7 உள்ளிட்ட விண்டோஸ் இயங்குதளங்களில் வேலை செய்யும்